இராமநாதபுரம்முதுகுளத்தூர்
முதுகுளத்தூரில் சோ. பாலகிருஷ்ணன் நினைவு தினம்

தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்கட்சி தலைவர், மற்றும் தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மறைந்த சோ. பாலகிருஷ்ணன் அவர்களின் நினைவு தினத்தையொட்டி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அமைந்துள்ள சோணை மீனாள் கலைக்கலூரியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் திமுக இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேதுகருணாநிதி, முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், முதுகுளத்தூர் சேர்மேன் ஷாஜகான், மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர்கழக செயலாளர்கள், கட்சிநிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.




