தமிழ்நாடு

இளையான்குடி : வணிகவியல் மன்றம் தொடக்கவிழா

வணிகவியல் மன்றம் தொடக்கவிழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, இளங்கலை மற்றும் முதுகலை வணிகவியல் மன்றம் தொடக்கவிழா 08.07.2025 அன்று நடைபெற்றது. துறைத்தலைவர் நாசர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களை உதவிப்பேராசிரியை பௌசியா சுல்தானா அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், வணிகவியல்துறை, பேராசிரியர் நெடுமாறன் கலந்துகொண்டு இளங்கலை வணிகவியல் மன்றத்தை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். மேலும் காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், நிறுவன செயலாண்மை துறைத்தலைவர், மூத்த பேராசிரியர் வேதிராஜன் முதுகலை வணிகவியல் மன்றத்தை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்வில் வணிகவியல் துறை மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். உதவிப்பேராசிரியர் சம்சுதீன் இப்ராஹிம் நன்றி கூறினார். உதவிப்பேராசிரியர் நசீர் கான் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button