கட்டுரைகள்

சீன வானொலி : தமிழ்ப் பிரிவின் பொன்விழாவுடன் நட்புறவு எனும் கட்டுரைப் போட்டி

http://tamil.cri.cn/301/2013/03/22/1s126559.htm

அன்புள்ள நண்பர்களே,

இவ்வாண்டின் ஆகஸ்ட் திங்கள் முதல் நாள் சீன வானொலி தமிழ்ப் பிரிவு தனது பொன் விழா நாளை கொண்டாடவுள்ளது. இதனை முன்னிட்டு, தமிழ்ப் பிரிவின் பொன்விழாவுடன் நட்புறவு எனும் கட்டுரைப் போட்டியை நடத்துகின்றோம். இப்போட்டிக்கான கட்டுரைகளை மே திங்கள் 31ம் நாளுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தமிழ்ப் பிரிவுடன் உங்களது சுவைமிகு அனுபவங்களை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள். கிடைக்கப் பெற்ற கட்டுரைகளிலிருந்து சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து தமிழ்ப் பிரிவின் இணையத்தளம் மற்றும் வானொலி நிகழ்ச்சியில் வழங்குவோம்.                   

மொத்தம், 3 முதல் பரிசுகள், 5 இரண்டாம் பரிசுகள், 10 மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும். இணையத்தளத்தில் மிகவும் விரும்பும் கட்டுரைக்கு வாக்களிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நடப்புப் போட்டியில், அதிக வாக்குகளைப் பெற்ற கட்டுரையை எழுதியவருக்கு சிறப்புப் பரிசை வழங்குவோம்.
மேலும், ஏதாவது ஒரு தமிழ் ஊடகத்தில் உங்கள் கட்டுரை வெளியிடப்பாட்டால், அந்தக் கட்டுரைக்கு ஒரு சிறப்புப் பரிவு உண்டு.
நண்பர்களே, கட்டுரைப் போட்டியில் உற்சாகத்துடன் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

வான் அஞ்சல் முகவரி

TAMIL SERVICE CRI-9,
CHINA RADIO INTERNATIONAL
P.O.Box 4216, BEIJING
P.R.CHINA 100040

மின்னஞ்சல்

tamil@cri.com.cn

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button