கவிதைகள் (All)

பாதைகளும் பயணங்களும்

அன்னையின் கருவறையில் ஜனித்து, 

அவனிக்கு வருகின்ற பயணம்!

தாயின் அன்பான அரவனைப்பில்,

மழழை துள்ளலாய் பயணம்!

பெற்றோர் காட்டும் பாதையில்,

பேணி செல்லுகின்ற பயணம்!

ஆசானின் அறிவு பாதையில்,

கல்வி தேடி பயணம்!

ஆன்மீக பேரருள் பாதையில்,

இறையருள் நாடி பயணம்!

இளமை எழுச்சி பாதையில்,

தடுமற்றமில்லா பயணம்!

வாழ்வாதார பாதையில்,

பணி தேடி பயணம்!

இல்லற இணைப்பு பாதையில்,

நல்லற மண வாழ்வு பயணம்!

நன்னெறி உறவு பாதையில்,

நல் சந்ததி நாடி பயணம்!

பாச நேச பாதையில்,

சுற்றம் சூழ்ந்து பயணம்!

முதுமை முடிவு பாதையில்,

முடிவுறா மறுமைக்கு பயணம்!

முன்னவன் நேர் வழி பாதையில்

நிரந்தர மோச்சத்திர்க்காய் பயணம்!!  

—-

மு.செய்யது உசேன்.

055 4908382

 hussain_vnryahoo.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button