இராமநாதபுரம்

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், மேலத்தூவல் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த சித்திரவேல் வயது 50 என்பவர் மேலத்தூவல் பகுதி யில் உள்ள அவரது ஆட்டுக் கிடைக்கு காலையில் வரும் போது ஏற்கனவே தரையில் அறுந்து கிடந்த மின்கம்பியில் தெரியா மல் மிதித்ததில் சித்திர வேல் சம்பவ இடத்தி லேயே ஆகஸ்ட், 1 ஆம் தேதி பரிதாபமாக உயிரி ழந்தார். அவரை காப் பாற்ற வந்த அவரது 11 ஆம் வகுப்பு படிக்கும் மகன் கிஷோர்குமார் வயது 16 பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் இராமநாதபுரம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவம னைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் உரிய நிவாரணம் வேண்டி சித்திரவேல் உடலை
வாங்காமல் அவரின் உறவினர்கள் ஆகஸ்ட், 4 ஆம் தேதி முதுகுளத்தூரில் சாலை’மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பரமக்குடி சப் கலெக்டர் மற்றும் முதுகுளத்தூர் வட்டாட்சியர், டிஎஸ்பி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அதனை தொடர்ந்து போராட்டகாரர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் சித்திரவேல் குடும்பத்திற்கு அரசின் நிவாரண நிதி ரூபாய் 10 லட்சம், மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜித் சிங் காலோன் காசோலையாக வழங்கினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button