வைரஸ்களுக்கு எதிராக செயல்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்…!!

Vinkmag ad

வைரஸ்களுக்கு எதிராக செயல்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்…!!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலே காற்றில் சுற்றித் திரியும் நோய் கிருமிகள் தாக்கும் அபாயம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்கினால் அது கிருமித்தொற்று, வைரஸ்களோடு போராடி உடலைப் பாதுகாக்கும்.

வைட்டமின் சி அதிகம் காணப்படும் நெல்லிக்காய் அல்லது கொய்யாவை, குடை மிளகாய் உடன் சேர்த்து சாலட்டாக செய்து தினமும் உணவில் எடுத்து கொள்ளலாம். அல்லது தினமும் 2 தக்காளி பழங்களை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

மஞ்சள் இயற்கையாகவே சிறந்த கிருமிநாசினி ஆகும். மஞ்சள் கலந்து செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் நமது உடலில் தங்கியுள்ள நச்சுகள், குடற் பூச்சிகள் போன்றவை அழிகின்றன.

2 கிராம் சுத்தமான பூண்டுவை 2 நாட்களுக்கு ஒருமுறை அல்லது 7 நாட்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளலாம். இஞ்சி மற்றும் பூண்டுவை அரைத்து, சட்னி அல்லது குழம்பு வைத்து உணவில் எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் வைரஸ்களில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.

சுவாசகோளாறை சரிசெய்வதில் துளசி முக்கிய பங்காற்றுகிறது. எனவே, துளசி இலைகளை பயன்படுத்தி தேநீர் தயாரித்து குடிக்கலாம். இஞ்சியுடன் துளசியை சேர்த்து ஜூஸ் செய்து குடிப்பதன் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

அன்னாசி பூ ரத்தத்தில் உள்ள நுண்கிருமிகளை அழிக்கும் வல்லமை உள்ளது. எனவே, இந்த பூவை பொடியாக்கி தேநீருடன் கலந்து தினமும் 100 மில்லி அளவுக்கு குடித்துவருவது நல்லது.

எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் ஆகியவற்றுடன் இஞ்சி சிறிது சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். இஞ்சியில் உள்ள வேதிப் பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த சாறை உணவிற்கு பின் எடுக்க வேண்டும்.

ஒமேகா 3 அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வால்ட் நட் மற்றும் மீன்களில் மற்றும் அதிக அளவு ஒமேகா 3 அமிலம் காணப்படுகிறது. மீன் சமைக்கும் போது அதில் சிறிதளவு வெந்தயத்தை சேர்த்துக் கொள்வது நல்லது.

தினமும் உணவில் 2 கிராம் கருஞ்சீரகத்தை எடுத்து கொள்ள வேண்டும். அதில் உள்ள உயிர் வேதியியல் சத்துகள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

சர்க்கரைவள்ளி கிழங்குடன் சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து உணவில் சேர்த்து கொள்ளலாம். சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின், வைட்டமின் பி, சி மற்றும் இரும்புச்சத்துகள் உள்ளன.

முருங்கைக் கீரையில் உள்ள சத்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. முருங்கைக்கீரை ரத்தத்தை சுத்தம் செய்வதுடன், எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

பப்பாளி வைட்டமின் C சத்துக்கு சிறந்த பழம். இது செரிமானத்தை எளிதாகத் தூண்டி தேவையான சத்துக்களை அளிக்கவல்லது. பொட்டாசியம், வைட்டமின் B போன்ற சத்துக்களும் இருப்பது கூடுதல் நன்மையளிக்கும்.

News

Read Previous

தமிழ்

Read Next

ஒற்றுமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *