General News

பிப்.13 முதுகுளத்தூரில் பெண்கள் தொழுகைப் பள்ளி அடிக்கல் நாட்டு விழா

 

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்திற்குட்பட்ட ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்திற்குச் சொந்தமான இடத்தில் பெண்கள் தொழுகைப்பள்ளி மற்றும் மதரஸா அடிக்கல் நாட்டு விழா இன்ஷா அல்லாஹ் 13.02.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு நடைபெற இருப்பதாக பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ஜனாப் எம். சீனி முஹம்மது தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் ஜமாஅத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

இப்பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி வரும் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மேலும் இப்பணி மிக விரைவாக நிறைவுற்று வரும் ரமலான் மாதத்தில் பெண்கள் தொழுவதற்குரிய வசதிகள் முழுமையாக நிறைவேற துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button