முதுகுளத்தூர் ஒன்றிய துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவராக ஆர்.தர்மர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளரும் புளியங்குடி ஒன்றிய கவுன்சிலருமான ஆர்.தர்மர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவர் சுதந்திராகாந்தி தலைமை வகித்தார். தேர்தல் அதிகாரி எம்.அழகேசன், ஆணையாளர் குருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கவுன்சிலர்கள் சதன்பிரபாகர், கே.கர்ணன், கவுன்சிலர்கள் உடை.எம்.சிவக்குமார், கோபால், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சுந்தரமூர்த்தி, மீனவரணி செயலாளர் பா.முருகேசன் உள்பட பலர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.