முதுகுளத்தூர் தெருக்களில் விசில் சத்தம் கேட்டால் வருவது குப்பை வண்டி அலார்ட் ஆகும் பொதுமக்கள்

Vinkmag ad

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் தெருக்களில் விசில் சத்தத்துடன் துப்புரவு ஊழியர்கள் குப்பைகளை சேகரி த்து வருகின்றனர். விசில் சத்தத்தை கேட்டவுடன் அலார்ட் ஆகும் பொதுமக்கள், வீடுகளில் இருந்து வெளியே வந்து தள்ளுவண்டியில் குப்பைகளை போட்டுவிட்டு செல்கின்றனர்.

முதுகுளத்தூர் பேரூரா ட்சி 15 வார்டுகளை கொண் டது. இங்கு 20க்கும் மேற்ப ட்ட துப்புரவு தொழிலாளர்கள் தினமும் அதிகாலை நேரங்களில் தெருக்களை சுத்தம் செய்து வருகின்றனர். டிராக்டருடன் தெருத்தெருவாக சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர். சில தெருக்கள் டிராக்டர்கள் செல்ல முடியாத அளவிற்கு குறுகலாக உள்ளன.

இத னால் அப்பகுதிகளில் உடனடியாக குப்பைகளை சேகரி க்க முடியாமல் தொழிலாளர்கள் சிரமப்பட்டு வந்த னர். கையில் கூடையை ஏந்தி தெருக்களில் குப்பை யை சேகரித்து வண்டியில் கொட்டி எடுத்துச்சென்றனர். இதில் நான்கு அல்லது ஐந்து முறையாவது தெருவிற்கும் வண்டிக்கும் சென்று வர வேண்டும். இதனால் நேரம் விரயமானதுடன், அலைச்சலும் ஏற்பட்டது. அலைச்சல் காரணமாக சில இடங்களில் தொழிலாளர்கள் செல்ல முடியாததால், பொதுமக்கள் தெருக்களில் குப்பைகளை கொட்டி வந்தனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வந்தது.
இதை தவிர்க்கும் வகையில் தற்போது தள்ளு வண்டி ஏற்பாடு செய்து அதில் குப்பைகளை சேகரி த்து வருகின்றனர். அதிகா லை நேரங்களில் தொழிலாளர்கள் தள்ளுவண்டிகளுடன் தெருக்களில் செல் வதால் மக்களுக்கு தெரிவதில்லை.

இதனால் அவர்கள் குப்பைகளை தயாராக எடுத்து வைக்க அறிவுறுத் தும் வண்ணம், தொழிலாளர்கள் வாயில் விசிலு டன் ஊதிக்கொண்டே செல்கின்றனர். விசில் சத்தத்தை கேட்டவுடன் அலார்ட் ஆகும் பொதுமக்கள், வீட்டில் சேக ரித்து வைத்துள்ள குப்பை களை வெளியில் தயாராக நிற்கும் தள்ளுவண்டியில் போட்டுவிட்டு செல்கின்றனர்.
இதுகுறித்து துப்புரவு தொழிலாளர்கள் கூறுகை யில், டிராக்டர் செல்ல முடியாததால் பொதுமக்கள் தங் கள் வீட்டில் சேரும் குப்பை களை தெருக்களில் கண்ட இடங்களில் கொட்டி வந்த னர். இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு வந்தது. தற் போது தள்ளு வண்டிகளில் தினமும் விசில் அடித்து கொண்டே செல்வதால் குப்பைகளை கண்ட இடங்களில் போடாமல் எங்கள் வண்டியில் போட்டு வருகின்றனர் என்றனர்.

News

Read Previous

Packet Tracer மூலம் நெட்வொர்க் பயிற்சி ஏடு

Read Next

முதுகுளத்தூரில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *