கவிதைகள் (All)

அமெரிக்க டாலர்

அமெரிக்க டாலர்

விளைப்பது ஆயுதம் விளைவது யுத்தம்
அறுவடை அமெரிக்க டாலர்

வெளியே வெள்ளை உள்ளே கருப்பு
விளங்க முடியாப் பிறப்பு

வெளியே கோட்டு உள்ளே புரட்டு
வேட்டை நரியின் திருட்டு

உலகம் தட்டு உயிர்கள் தீனி
உண்டு நிறையா வயிறு

வானம் கிழியுது கணைகள் பொழியுது
வாழும் பூமி சுடுகாடு

கொலம்பஸ் வந்தான் அமெரிக்கா கண்டான்
குடிகளின் குரல்வளை கடித்தான்

வாஸ்கோடா வந்தான் வணிகம் என்றான்
இந்திய வேரில் தீயை வைத்தான்

நாடுகள் புறம்போக்கு நயவஞ்சகர் உடன்பிறப்பு
மண்ணும் வளமும் அபகரிப்பு

சட்டம் காகிதம் தர்மம் புண்ணாக்கு
மூடிய முகங்கள் காட்டேரி

அன்புடன் புகாரி

https://www.facebook.com/share/v/1AYVAtMjTK

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button