முதுகுளத்தூரில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

Vinkmag ad

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில், ஜமாத் தலைவர் காதர்முகைதீன் தலைமையிலும், கல்விக்குழு தலைவர் முகம்மது மீரா, துவக்க பள்ளி தாளாளர் ஹபீப் முகம்மது, நர்சரி பள்ளி தாளாளர் பாசில் அமீன் முன்னிலையில், தாளாளர் அன்வர் கொடியேற்றினார். உதவி தலைமை ஆசிரியர் முகம்மது சுல்த்தான் அலாவுதீன் நன்றி கூறினார்.

முதுகுளத்தூர் டி.இ.எல்.சி., உயர்நிலைபள்ளியில் பள்ளி கிராம கல்விக் குழு தலைவர் புகழேந்தி கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் ரவீந்திரன், உதவி தலைமை ஆசிரியர் தர்மராஜ் முன்னிலை வகித்தனர்.

 

முதுகுளத்தூரில் அனைத்து பள்ளி மாணவ, மாணவிகள் சேர்ந்து சரவண பொய்கை ஊருணியில் குடியரசு தினவிழா கொண்டாடினர்.

ரஹ்மானியா ஐ.டி.ஐ நிறுவனர் கொடி ஏற்றினார். விழாவில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜே.ஞானதாஸ், பேருராட்சி செயல் அலுவலர் ராஜராம், பேருராட்சி தலைவர் சசிவர்ணம், இன்ஸ்பெக்டர்கள் ஜேசு, கென்னடி, பேருராட்சி துணை தலைவர் பாசில்அமீன், வர்த்தக சங்க செயலாளர் மாஸ்டர் சண்முகம், நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மங்களநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, டி.யி.எல்.சி உயர் நிலைப்பள்ளி,காமராஜர் மெட்ரிக்பள்ளி மாணவ,மாணவிகள்,ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் என்.சி.சி திட்ட ஒருங்கிணைப்பாளர் துரைப்பாண்டியன் நன்றி கூறினார்.

முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் சசிவர்ணம் கொடி ஏற்றினார். செயல் அலுவலர் ராஜராம் முன்னிலை வகித்தார்.

இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஊராட்சித் தலைவர் மயிலேறிவேலன்  கொடி ஏற்றினார், துணைத்தலைவர் சம்சுல் லத்தீப் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை எம்.ரோஸ்லின் புஷ்பலீலா வரவேற்றார்.

எம்.தூரி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் காளிமுத்து கொடி ஏற்றினார்.

காத்தாகுளம் தொடக்கப் பள்ளியில் ஊராட்சித் தலைவர் ராமன் கொடி ஏற்றினார்.

கீரனூர் பள்ளியில் ஊராட்சித் தலைவர் புவனேஸ்வரன் கொடி ஏற்றினார். முன்னாள் ஊராட்சித் தலைவர் நசீப் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை மேரிமுத்துக்குமாரி வரவேற்றார்.

News

Read Previous

காவிரி குடிநீர் குழாயை சேதப்படுத்தி விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சல்

Read Next

சமூக பாதுகாப்பு திட்ட விழிப்புணர்வு முகாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *