மண்டபம் அதிமுக மேற்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம்

மண்டபம் அதிமுக மேற்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம்

ராமநாதபுரம் தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் ஜூலை 30 ல் பரமக்குடி, திருவாடானை, ஆர். எஸ். மங்கலம், ஜூலை 31 ல் ராமநாதபுரம், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் உரையாற்ற உள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு ஒன்றியம் அதிமுக சார்பில் பட்டினம் காத்தான் ஈ.சி.ஆர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட கழகச் செயலாளர் எம். ஏ. முனியசாமி தலைமையிலும், அனைத்து எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் ஆர். ஜி. ரெத்தினம் மற்றும், முன்னாள் சேமிப்பு கிடங்கு வாரிய தலைவர் முனியசாமி ஆகியோர் முன்னிலையிலும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வருகை புரிந்த அமைப்புச் செயலாளர் சிவ பரமசிவம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர் ஜி மருது பாண்டியன் இந்த ஆலோசனை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




