முதுகுளத்தூரில் குரூப் 2 தேர்வு அறிமுக நிகழ்ச்சி

முதுகுளத்தூரில் குரூப் 2 தேர்வு அறிமுக நிகழ்ச்சி

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் ஜமாத் ஹிம்மதுல் இஸ்லாம் வாலிபர் சங்கம் மற்றும் ஷரியத்துல் இஸ்லாம் சன்மார்க்க சங்கம் சார்பாக குரூப் 2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் அறிமுக நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
சங்க ஆடிட்டர் அப்துல்லா அசன்கனி வரவேற்பு உரை ஆற்றி, திடல் பள்ளி தலைமை இமாம் முகமது சிராஜுதீன் கிராத் ஓதி ஆரம்பித்து வைத்து , கல்வியின் முக்கியத்துவம் பற்றி மிக சிறப்பாக உரை ஆற்றினார்கள்,ஆசிரியர்கள் அப்துல் ரசாக், பாத்திமா பார்ஜனா, நசிமா பேகம் தேர்வு பற்றி சிறப்புரை ஆற்றினார்கள்.
பெரிய பள்ளிவாசல் கல்வி குழு பொருளாளர் பக்ருதீன் அலி அஹமது மற்றும் சங்க செயலாளர் அஹமது கபிர் சிறப்புரை ஆற்றி, சங்க பொருளாளர் அசன்தீன் அவர்கள் நன்றியுரை கூற விழா சிறப்பாக நிறைவுற்றது, விழா ஒருங்கிணைப்பு, ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம் மற்றும் ஷரீயத்துல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள்.