ஹிஜ்ரி புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ஹிஜ்ரி புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இசுலாமிய நாட்காட்டி (Islamic calendar) அல்லது முஸ்லிம் நாட்காட்டி (Muslim calendar) அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி (Hijri calendar) அல்லது ‘ஹிஜ்ரா நாட்காட்டி (அரபி: التقويم الهجري; அத்-தக்வீம் அல்-ஹிஜ்ரீ; பாரசீகம்: تقویم هجری قمری தக்வீமே ஹெஜிரே கமரீ) ஒரு சந்திர நாட்காட்டி ஆகும். இது ஆண்டிற்கு 12 சந்திர மாதங்களைக் கொண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது.இந்த நாட்காட்டி கிரெகொரியின் நாட்காட்டியுடன் பல முஸ்லிம் நாடுகளில் நிகழ்வுகளைப் பதிய பயன்படுத்தப்பட்டு வருகிறது. இசுலாமிய சமய புனிதநாட்களையும் பண்டிகைகளையும் கணக்கிட முஸ்லிம்கள் உலகெங்கும் இந்த நாட்காட்டியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நாட்காட்டியின் துவக்கம் ஹிஜிரா, அதாவது இசுலாமிய இறைதூதர் முகம்மது நபி(ஸல்) அவர்கள் சவூதி அரேபியாவில் உள்ள மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த ஆண்டாகும். ‘ஹிஜ்ரத்’ என்ற அரபி வார்த்தைக்கு ‘இடம் பெயர்தல்’ எனப் பொருள்படும்.
ஹிஜிரி ஆண்டு H – ஹிஜ்ரி அல்லது AH (இலத்தீனத்தில் Anno Hegirae என்பதன் சுருக்கம்) எனவும் ஹிஜிராவிற்கு முந்தைய ஆண்டுகள் BH (Before Hegirae) எனவும் வழங்கப்படும்.[1]
இது முஹரம் மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது .
அல்லாஹ் அவர்களது
அருட் கருணையால்
இஸ்லாமியர் அனைவரும்
எல்லா வளமும் நலமும் பெற்று
பல்லாண்டு மகிழ்வுடன் வாழ
வாழ்த்துகிறேன்
அன்புடன்,
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.
27.06.2025