General News

துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

துபாய் ; துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 16.05.2012 புதன்கிழமை மாலை அஸ்கான் டி பிளக்கில் நடைபெற்றது.
துவக்கமாக இறைவசனங்கள் ஓதப்பட்டது. திருச்சி சையது ஹதீஸ் வாசித்தார். விருதுநகர் சையது ஹுசைன் தீனிசைப் பாடல் பாடினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய பேச்சாளர் திருப்பத்தூர் நாவலர் கௌஸ் முஹைதீன் இஸ்லாத்திற்காக பெண்களின் தியாக வரலாற்றை உருக்கமாக நினைவு கூர்ந்தார்.
முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.  நிகழ்வில் சாதிக் காக்கா, தாவூத் அலி மன்பஈ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button