General News

முதுகுள‌த்தூர் இஸ்லாமிய‌ ப‌யிற்சி மைய‌த்தில் இல‌வ‌ச‌ ப‌யிற்சி வ‌குப்புக‌ள் துவ‌க்க‌ விழா

முதுகுள‌த்தூர் இஸ்லாமிய‌ ப‌யிற்சி மைய‌த்தில் 9 ஆம் வ‌குப்பு முத‌ல் 12 ஆம் வ‌குப்பு வ‌ரை ப‌யிலும் ச‌முதாய‌ மாண‌வ‌ர்க‌ளுக்காக‌ இல‌வ‌ச‌ ப‌யிற்சி வ‌குப்புக‌ள் க‌ட‌ந்த‌ ஐந்து ஆண்டுக‌ளாக‌ ந‌டைபெற்று வ‌ருகிற‌து.
2009 10 ஆம் கல்வி ஆண்டுக்கான‌ இல‌வ‌ச‌ ப‌யிற்சி வ‌குப்புக‌ள் துவ‌க்க‌ விழா 07.06.2009 ஞாயிறு காலை ப‌த்து ம‌ணிக்கு ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இத்துவ‌க்க‌ விழாவில் முதுகுள‌த்தூர் பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் த‌லைமை இமாம் ‘சிராஜுல் உம்ம‌த்’ ம‌வ்ல‌வி எஸ். அஹ்ம‌த் ப‌ஷீர் சேட் ஆலிம், சாயிருல் மில்ல‌த் முதுவைக் க‌விஞ‌ர் ம‌வ்ல‌வி ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் பாஜில் ம‌ன்ப‌யீ, ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் மார்க்க‌ ஆலோச‌க‌ர் ம‌வ்ல‌வி ஏ. சீனி நைனார் முஹ‌ம்ம‌து தாவூதி உள்ளிட்ட‌ உல‌மாப் பெரும‌க்க‌ள் க‌ல‌ந்து கொண்டு ப‌யிற்சி மைய‌த்தை துவ‌க்கி வைக்க‌ இருக்கின்ற‌ன‌ர்.

இவ்விழாவிற்கான‌ ஏற்பாடுக‌ளை இஸ்லாமிய‌ ப‌யிற்சி மைய‌ முத‌ல்வ‌ர் ஆசிரிய‌ர் ஹெச்.ஏ. முஹ‌ம்ம‌து சுல்தான் அலாவுதீன் செய்து வ‌ருகிறார்.

இந்த‌ இஸ்லாமிய‌ ப‌யிற்சி மையம் ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத்தின‌ரால் நிர்வ‌கிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.

Message from
From: seenixerox

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button