இராமநாதபுரம்
ஆய்வு

ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஹாட் சிப்ஸ் கடையில் விவரச்சீட்டு இன்றி பொருட்கள் விற்கப்படுவதாக வந்த புகாரின் படி உணவு பாதுகாப்புத் துறையினர் அக்கடையில் இன்று ஆய்வு செய்தனர். அக்கடையின் உணவு பாதுகாப்புத் துறை உரிமம் காலாவதி என தெரியவந்தது. உணவு பொருள்கள் தயாரிப்பு, காலாவதி தேதி இன்றி குறிக்கப்படாமல் இருந்தது. உணவு பாதுகாப்பு சட்டம் 2006 படி அக்கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர்.





