கவிதைகள் (All)

இனி

இனி யுத்தமில்லா உலகம் வேண்டும்.
இனியோர் சொல்லை ஏற்றிடல் வேண்டும்.
இனிமையாய் பொழுது விடியல் வேண்டும்.
இனிதய் ஈந்து மகிழ்ந்திட வேண்டும்.
இனியெங்கும் சுபிட்சம் அடைய வேண்டும்.
இனிக்கின்ற இல்லற வாழ்வு வேண்டும்.
இனிய நண்பர்கள் அமைய வேண்டும்.
பனியிடத்தில் நல் உலைப்பு வேண்டும்.
பனிந்து பெற்றோரை பேணிட வேண்டும்.
பனிக்காற்றில்லா தென்றல் வேண்டும்.
பினியில்லா நல் ஆறோக்கியம் வேண்டும்.
புனித்தால் நேர் வழி பெற வேண்டும்.
மனிதர்க்கு இறை பயம் வேண்டும்.
மனித நேயம் மலர வேண்டும்
கனித விஞ்ஞானம் கற்றுத் தெளிய வேண்டும்.
கனிமங்கள் நிறைந்திருக்க வேண்டும்.
கனிகள் செடி கொடிகள் மாறா பசுமை வேண்டும்.
கனி மொழி செம்மொழி எங்கும் பேச வேண்டும்.
சினிமா சீர் கெடுத்திறாதிருக்க வேண்டும்.
தனி என்ற தீண்டாமை ஒழியவேண்டும்.
துணிந்தே நல்லதை சாதிக்க வேண்டும்.
அனீதமில்லா நல்லாட்சி வேண்டும்
வணிகத்தில் உண்மை பேச வேண்டும்.
வினியோக பொருள் கலப்பின்றி வேண்டும்.
மானிடர் யாவரும் நேர் வழி பெற வேண்டும்.
 
 
                                                                             தங்கள் அன்புள்ள
                                                        விருதை.மு.செய்யது உசேன்.
                                                         hussain_vnr@yahoo.com      0554908382.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button