விவசாயிகளுக்கு நெல் சாகுபடிநவீன தொழில் நுட்ப ஆலோசனை

Vinkmag ad

முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை ஏற்பாட்டில் நவீன தொழில் நுட்ப ஆலோசனைகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர், நெல் சாகுபடி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளன.

நெல் விவசாயத்தில் நவீன தொழில் நுட்பங்களைக் கடைப்பிடித்து, அதிக மகசூல், வருமான லாபம் பெறுவதற்கு விவசாயிகளுக்கு நேரடி ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

உயிர் உரம் நேர்த்தி செய்முறை, முளைப்புத் திறன் பரிசோதனை, நில மேலாண்மை, உயிர் உரம் உபயோகம், விதைப்பு தொழில் நுட்பம், களை நீக்கும் மேலாண்மை, தொழு உரம் தயாரிப்பு, பூச்சி ஒழிப்பு மற்றும் நோய் தடுப்பு மேலாண்மை ஆகிய நவீன விவசாய தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயத் தொழில் வல்லுநர் செந்தில் குமார் தகுந்த ஆலோசனைகளைக் கூறினார்.

News

Read Previous

இடைத் தேர்தலில் வெற்றி: அதிமுக கவுன்சிலர் பதவி ஏற்பு

Read Next

மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா – பனுவல்

Leave a Reply

Your email address will not be published.