விலையில்லா பொருள் வழங்கல்

Vinkmag ad

முதுகுளத்தூர்: நல்லுக்குறிச்சி, விக்கிரபாண்டியபுரம்,சிறுகுடி ஆகிய ஊராட்சிகளில், முறையே ஊராட்சி தலைவர்கள் தனசேகரன், சந்திரபோஸ், இருளாயி தலைமையில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் விழா நடந்தது.

ஊராட்சி செயலர்கள் பிரகாஷ் (நல்லுக்குறிச்சி), சுரேஷ் (சிறுகுடி) வரவேற்றனர்.ரூ.58 லட்சத்து, 94 ஆயிரத்து 220 ரூபாய் மதிப்பிலான விலையில்லா பொருட்களை முதுகுளத்தூர் எம்.எல்.ஏ., முருகன், ஒன்றிய செயலாளர் தர்மர், ஒன்றிய குழு தலைவர் சுதந்திராகாந்தி வழங்கினர்.மாவட்ட பஞ்., கவுன்சிலர் கர்ணன், சாம்பக்குளம் கூட்டுறவு சங்க தலைவர் அழகர்சாமி, முதுகுளத்தூர் வட்ட வீட்டு வசதி சங்க தலைவர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய மீனவரணி செயலாளர் முருகேசன், ஒன்றிய ஜெ., பேரவை தலைவர் பரம்பொருள் காளிமுத்து, மாவட்ட இளைஞரணி பொருளாளர் ராமசாமி, ஒன்றிய பாசறை செயலாளர் மாரி, ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தராஜ், இளைஞரணி இணை செயலாளர் சிவக்குமார், துணை தலைவர் செந்தில்குமார், விளக்கனேந்தல் ஊராட்சி தலைவர் ராமையா பங்கேற்றனர்.

 

News

Read Previous

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வீடு வாடகைக்கு

Read Next

இருசக்கர வாகன விபத்து: இளைஞர் சாவு

Leave a Reply

Your email address will not be published.