வரதட்சணை கொடுக்காததால் கணவர் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்ததாக புதுப்பெண் புகார்

Vinkmag ad

முதுகுளத்தூர், ஜன. 10–

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பொதிகுளத்தை சேர்ந்த பெண் குமரவேலுக்கும் (வயது25), திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்த கண்ணனுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் 21–ந்தேதி திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது வரதட்சணையாக 20 பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்கம் தருமாறு கண்ணன் தரப்பினர் கேட்டுள்ளனர்.

வரதட்சணை கொடுப்பதில் குமரவேலின் குடும்பத்திற்கு போதிய வசதி இல்லை. இருப்பினும் வரதட்சணையை பெற்றோரிடம் வாங்கி வந்தால் மட்டுமே வாழ்க்கை வாழ முடியும், இல்லாவிட்டால் சாப்பாடு கூட கிடைக்காது எனவும், இன்னும் சில நாட்களில் வரதட்சணை பொருட்கள், பணத்தை வாங்கி வராவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் கண்ணன் குடும்பத்தினர் மிரட்டினார்களாம்.

குமரவேலுவை, கணவர் வீட்டார் தினமும் தொந்தரவு செய்துள்ளனர். இதில் ஏற்பட்ட பிரச்சனையால் முதலிரவு கூட நடத்தாமல் குமரவேலை அடித்து துன்புறுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

உயிர் பிழைத்தால் போதும் என கணவர் வீட்டிலிருந்து தப்பி வந்த குமரவேல், கமுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார்.

இதன்பேரில் இன்ஸ்பெக்டர் மலர் விசாரணை நடத்தி குமரவேலின் கணவர் கண்ணன், மாமியார் இருளாயி, கணவருடைய அண்ணன் கிருஷ்ணகுமார், அக்காள் மகேஷ், மச்சான் சத்தியசீலன், தாய்மாமன் காளிமுத்து உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

News

Read Previous

பேனாவைக்கொல்ல முடியாது

Read Next

நெய்ப்பொங்கல்

Leave a Reply

Your email address will not be published.