முதுகுளத்தூர் பேரூராட்சியில் குப்பைத்தொட்டி வைக்க பொதுமக்கள் கோரிக்கை

Vinkmag ad

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் பேரூராட்சியில் உள்ள தெருக்களில் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் குப்பைத்தொட்டி  வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக் கை விடுத்துள்ளனர்.  முதுகுளத்தூர் பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது. இங்குள்ள தெருக்களில் குப்பைகள் கொட்ட 12வது நிதிக்குழு திட்டத்தில் பல லட்சம் மதிப்பில் குப்பை தொட்டி கள் வைக்கப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட இந்த குப்பைத்தொட்டிகள் அனைத்தும் தற்போது, சேதமடைந்து காணப்படுகின்றன.  இதனால் வீடுகளில் இருந்து கொட்டப்படும் குப்பைகள் தெருக்களில் சிதறிக்கிடக்கின்றன. தெருக்களில் நடமாட முடியாத சூழல் நிலவுகிறது. இதேபோல் தாலுகா அலுவலகத்திற்கும் தேவர் மஹாலுக்கும் இடையில் உள்ள தெருவில் வாரம் ஒரு முறை கூட துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை.

இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் நிலவுகிறது.   எனவே தெருக்களில் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும் என்றும், அடிக்கடி துப்புரவு பணி மேற்கொள்ள வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து முதுகுளத்தூரை சேர்ந்த சிவகாமி என்ற பெண் கூறுகையில், முதுகுளத்தூர் பேரூராட்சியில் குப்பைகள் கொட்ட பிளாஸ்டிக் தொட்டிகள் வைக்கப்பட்டது. அனைத்தும் உடைந்துவிட்டது. அதனால் குப்பைகளை பொதுமக்கள் சாலையோரங்களிலும் தெருக்களிலும் கொட்டுகின்றனர். இதனால் சுகாதாரக்கேடு அபாயம் நிலவுகிறது. தெருக்களை சுத்தம் செய்து குப்பை தொட்டி அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

News

Read Previous

கதவு

Read Next

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் சீதனம்

Leave a Reply

Your email address will not be published.