முதுகுளத்தூர் அருகே அம்மா திட்ட முகாம்

Vinkmag ad

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே காக்கூர் வருவாய் கிராமம் ராமலிங்கபுரத்தில் அம்மா திட் முகாம் நடைபெற்றது. இதற்கு வட்டாட்சியர் கணேசன் தலைமை வகித்தார். முகாமில் குடும்ப அட்டடையில் பெயர் சேர்த்தல், தித்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் 12 பெறப்பட்டன. அனைத்திற்கும்தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டவழங்கல் அலுவலர்ராமசாமி, வருவாய் அலுவலர் அய்யாதுரை, கிராம நிர்வாக அலுவலர் ராமையா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மண்டபம் ரயில் நிலையத்தில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள்மண்டபம்: மண்டபம் ரயில் நிலையத்தில் கருவேல மரங்கள் அகற்றப்படாமல் உள்ளன.ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட  13 மாவட்டங்களில் நீலத்தடி நீர் குறைந்து வருவதறக்கு முக்கிய காரணமான கருவேலமரங்களை அகற்ற உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கலெக்டர் ராமநாதபுரம் பகுதியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற அந்த பகுதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டு பகுதியில் உள்ள அரசு பறம்போக்கு நிலங்களில் உள்ள கருவேல மரங்கள் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டுள்ளது.மேலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரயிவே நிலம், மீன்வளத்துறைக்கு சொந்தமான இடம், பொதுப்பணித்துறை நிலம், மேலும் தனியார் நிலங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்றவும் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் மண்டபம் மற்றும் உச்சிப்புளி போன்ற பகுதிகளில் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலங்களில் இன்னும் கருவேல மரங்கள் அகற்றாமல் உள்ளது. மேலும் மண்டபம் ரயில் நிலையத்தில் அதிகளவில் கருவேல மரங்கள் இருப்பதால் சமூக விரோதிகள் மது அருத்திவிட்டு அந்தப் பகுதி வழியாக ரயிலில் பயணம் செல்ல செல்லும் பெண்களை கேலி செய்கின்றனர். இதனால் ரயிலில் பணம் செய்ய செல்லும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் அச்சமடைந்து வருகின்றனர்.பிப்.10ம் தேதிக்குள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கருவேல மரங்களை அகற்றிவிட்டு அது குறித்து அறிக்கையை கலெக்டர் தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மண்டபம் ரயில் நிலையத்தில் கருவேல மரங்கள் அகற்றப்படாமல் உள்ளது. இது நீதி மன்ற உத்தரவை அவமதிப்பு செய்வதாக மண்டபம் பகுதி மக்கள் கூறுகின்றனர்

News

Read Previous

துபாயில் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி

Read Next

காதலர் தின ஸ்பெஷல் கவிதை

Leave a Reply

Your email address will not be published.