முதுகுளத்தூர் அரசு பள்ளியில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

Vinkmag ad

முதுகுளத்தூர், : ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் அவார்டு டிரஸ்ட் சார்பில் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் ஞானதாஸ் தலைமை வகித்தார். பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் 250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பொறியியல், வேளாண்மைதுறை, மீன் வளத்துறை, கலை மற்றும் அறிவியல்துறை, பாலிடெக்னிக் கேட்டரிங், ஐடிஐ உள்ளிட்ட பல்வேறு வகையான மேற்படிப்புகள் தேர்வு செய்யும் வழி முறைகள் குறித்தும் விளக்கப்பட்டன. ரிலையன்ஸ் அறக்கட்டளை செந்தில்குமரன், சுந்தரவேல், கிங்க்ஸ் கல்லூரி விரிவுரையாளர் நாசர், முகமது சதக் கல்வி நிறுவனம் சார்பில் ராபர்ட், சர்தார், ஜோசுவா ஆகி யோர் கலந்து கொண்டனர். ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் கிருபா, அன்பழகன் கலந்து கொண்டனர்.
ராமேஸ்வரம் விவேகானந்தா வித்தியாலயா மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் சதீஷ், பிரியரஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். துணை தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், அவார்டு டிரஸ்ட் இயக்குனர் சின்னமருது, என்சிசி ஆசிரியர் துரைபாண்டியன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் அவார்டு டிரஸ்ட் நிறுவனங்கள் செய்திருந்தின. ஆசிரியர் துரைப்பாண்டியன் நன்றி கூறினார்.

News

Read Previous

பிள்ளையா…? பிழையா…? – ஏக்கங்களுடன் ஒரு தாய்

Read Next

தம்பி … வா ! தளபதி நீ !

Leave a Reply

Your email address will not be published.