முதுகுளத்தூரில் வட்டார அளவிலான தடகள போட்டி

Vinkmag ad

டி.மாரீயூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் மாணவ,மாணவிகளுக்கு வட்டார அளவிலான தடகள போட்டிகள் ஸ்ரீகண்ணா மெட்ரிக் பள்ளி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன.

போட்டியினை விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ்.சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ஆர்.தர்மர், முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ்.பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போட்டியில் 14 வயதிற்குள்பட்ட ஆண்கள் பிரிவில் 100 மீட்டர் தடகள போட்டியில் நரிப்பையூர் பாரத மாதா பள்ளி மாணவர் எஸ்.ஹெபிராஜா முதல்

இடத்தையும்,முதுகுளத்தூர் அரசு பள்ளி மாணவர் ஜி.பூவலிங்கம் இரண்டாமிடத்தையும் பெற்றனர். 200 மீட்டர் போட்டியில் ஜி.பூவலிங்கம் முதலிடத்தையும்,தேரிருவேலி பள்ளி மாணவர் என்.விஷ்ணுராஜா இரண்டாமிடத்தையும் பெற்றனர். 400மீட்டர் போட்டியில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர் டி.செல்வபாரதி முதலிடத்தையும்,ஹெபிராஜா இரண்டாமிடத்தையும் பெற்றனர்.

14 வயது பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை சாயல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எம்.தர்மமுனீஸ்வரன் பெற்றார்.

17 வயதிற்குள்பட்ட பிரிவில் 100 மீ தடகளப் போட்டியில் இளஞ்செம்பூர் உயர்நிலைப்பள்ளி மாணவர் ஜி.கார்த்தி முதலிடத்தையும்,

கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆர்.சேதுபதி இரண்டாமிடத்தையும் பெற்றனர். 200மீ போட்டியில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர் கே.அருண்குமார் முதலிடமும்,வி.அஜித்குமார் இரண்டாமிடத்தையும் பெற்றனர். 400 மீ போட்டியில் பள்ளிவாசல் பள்ளி மாணவர் பி. ராஜ்குமார் முதலிடத்தையும்,அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆர்.முனியசாமி இரண்டாமிடத்தையும் பெற்றனர். 800 மீ போட்டியில் கிடாத்திருக்கை பள்ளி மாணவர் கே.காசிநாதன் முலிடத்தையும், பள்ளிவாசல் பள்ளி மாணவர் எம்.பிரேம் குமார் இரண்டாமிடத்தையும் பெற்றனர்.1500 மீ போட்டியில் கிடாத்திருக்கை பள்ளி மாணவர் கே.காசிநாதன் முலிடத்தையும்,பள்ளிவாசல் பள்ளி மாணவர் எல்.முனீஸ்வரன் இரண்டாமிடத்தையும் பெற்றனர். 17 வயது பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர் வி.அஜித் தட்டிச்சென்றார்.

19 வயது பிரிவில் 100 மீ போட்டியில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளி மாணவர் கே.சச்சின் திவாகர் முதலிடமும், அரசு பள்ளி மாணவர் ஏ.கிருஷ்ணன் இரண்டாமிடமும் பெற்றனர். 200 மீ போட்டியில் தேரிருவேலி பள்ளி மாணவர் எம்.அருண்குமார் முலிடத்தையும், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஏ.கிருஷ்ணன் இரண்டாமிடமும் பெற்றனர். 400 மீ போட்டியில் பள்ளிவாசல் பள்ளி மாணவர் யூ.முகமது பைசல்கான் முதலிடமும், அரசு பள்ளி மாணவர் பரமசிவன்

இரண்டாமிடமும் பெற்றனர். 800 மீ போட்டியில் பள்ளிவாசல் பள்ளி மாணவர் யூ.முகமது பைசல்கான் முதலிடத்தையும், தேரிருவேலி பள்ளி மாணவர் எம்.அருண்குமார் இரண்டாமிடமும் பெற்றனர். 19 வயது பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர் யூ.முகமது பைசல்கான் பெற்றார். போட்டிக்கான ஏற்பாட்டினை உடற்கல்வி பயிற்றுநர்கள் ஆர்.பாலசுந்தரம்,பி.கோகிலா,கமால்பாட்சா ஆகியோர் செய்திருந்தனர்

News

Read Previous

உங்கள் முகநூல் பக்கத்தை யாரெல்லாம் பார்கிறார்கள் என்று தெரியனுமா?

Read Next

மணமகன் தேவை

Leave a Reply

Your email address will not be published.