முதுகுளத்தூரில் பாலித்தீன் பைகளுக்கு தடை: வியாபாரிகளுக்கு பேரூராட்சி அதிகாரி எச்சரிக்கை

Vinkmag ad

முதுகுளத்தூர் பேரூராட்சியில் பாலித்தீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமாரின் உத்தரவின் பேரில் இயற்கை மண் வளத்தை பாதுகாக்க வேண்டி முதுகுளத்தூர் பேரூராட்சியில் பாலித்தீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக செயல் அலுவலர் இளவரசி தெரிவித்துள்ளார்.

முதுகுளத்தூர் வர்த்தக சங்க வியாபாரிகளுக்கும் பொது மக்களுக்கும் இது குறித்து துண்டு பிரசுரங்கள் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

40 மைக்ரான் அளவுக்கு கீழ் உள்ள பலித்தீன் பைகளை பயன்படுத்தினால் பறிமுதல் செய்வதுடன், கடை உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் முதுகுளத்தூரில் உள்ள வீடு மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் மக்கும் குப்பைகளை கொண்டு 2 ஏக்கர் நிலப்பரப்பில் பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்ட இயற்கை உரம் தயாரிக்கும் சேமிப்பு கிடங்கில் இ.எம்.ஐ,என்ற வேதிப்பொருள் உதவியுடன் தயாரிக்கப்பட்ட 500 கிராம் இயற்கை உரம் ரூ.2க்கு விற்பனைக்கு உள்ளதாகவும் இதனை விவசாயிகள் வாங்கி பயன்பெறும்படியும் செயல் அலுவலர் இளவரசி தெரிவித்தார்.

News

Read Previous

முதுமையின் ரகசியங்கள்

Read Next

சோணைமீனாள் கல்லூரியில் கண் சிகிச்சை முகாம்

Leave a Reply

Your email address will not be published.