மருத்துவ முகாம்

Vinkmag ad

முதுகுளத்துார் அருகே சாம்பக்குளத்தில் கீழத்துாவல் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதி தலைமை வகித்தார். இளைஞரணி துணை செயலாளர் செந்தில்குமார், கூட்டுறவு சங்க தலைவர் அழகர்சாமி முன்னிலை வகித்தனர். கர்ப்பிணிகள், இருதய கோளாறு, கண், காது, மூக்கு, தொண்டை, பொது மருத்துவத்தில் 528 பேர் பரிசோதனை செய்தனர்.

மேல் சிகிச்சை தேவைப்படுவோர் மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். வட்டார மருத்துவ அலுவலர் பிரசன்னா, சுகாதார மேற்பார்வையாளர் கோவிந்தசாமி, சுகாதார ஆய்வாளர்கள் நேதாஜி, சேகரன், முனியசாமி, செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்

News

Read Previous

ஊருக்கு வினியோகிக்க காவிரி குடிநீர்…இல்லை தாராளமாகப் பாயுது வயல்வெளிகளில்

Read Next

மருந்து கடை தொழிலாளி கொலை: மேலும் மூவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *