மக்கள் தொடர்பு முகாம்

Vinkmag ad

முதுகுளத்தூர் தாலுகா தட்டானேந்தலில் புதன்கிழமை மக்கள் தொடர்பு முகாம்  நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமாரின் உத்தரவின் பேரில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள தட்டானேந்தலில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வட்டாட்சியர் எஸ்.மோகன் தலைமை வகித்தார். முதுகுளத்தூர் ஒன்றியக் குழு தலைவர் சுதந்திராகாந்தி இருளாண்டி முன்னிலை வகித்தார். முகாமில் குடும்ப அட்டை வழங்குதல், பட்டா மாறுதல், வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ், வீட்டுமனைப் பட்டா வழங்குதல், முதியோர் உதவித்தொகை என 87 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது.

சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் லீலாவதி, மண்டல துணை வட்டாட்சியர் மரகதமேரி, வட்ட வழங்கள் அலுவலர் கிருஷ்ணசாமி, வருவாய் அலுவலர் மதியழகன், கிராம நிர்வாக அலுவலர் பிரபாவதி, ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல், கடலாடி ஊராட்சி சேரந்தையில் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் குணாளன் தலைமையில் புதன்கிழமை மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமில்  குடும்ப அட்டை வழங்குதல், பட்டா மாறுதல், வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் என 54 மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்டது. கடலாடி தாசில்தார் அமிர்தம், சமூக நலத் துறை வட்டாட்சியர் ராஜேஸ்வரி ஊராட்சி மன்றத் தலைவர் சக்கரபாண்டி, மண்டல துணை வட்டாட்சியர் ஞானவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News

Read Previous

2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகள்: கேள்விகளும், பதில்கள்

Read Next

இலவச கண் சிகிச்சை முகாம்

Leave a Reply

Your email address will not be published.