பள்ளி ஆண்டு விழா

Vinkmag ad

முதுகுளத்தூரில் மெட்ஸ்  மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 பள்ளியின் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா எஸ்.கமால்நாசர் நினைவரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மெட்ஸ் நிறுவனத் தலைவர் எம்.எஸ்.நைனா முகம்மது தலைமை வகித்தார். உதவித் தலைவர் ஏ.அப்துல்குத்தூஸ், செயலர் எஸ்.காதர்மைதீன், துணைச் செயலர் ஏ.நசீம் அகமது, பொருளாளர் எஸ்.வரிசைமுகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர், போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன் பரிசுகளை வழங்கி, சிறப்புரையாற்றினார்.

விழாவில் சோனை மீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் எஸ்.கோவிந்தராஜன், பேரூராட்சி துணை தலைவர் பாசில் அமீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பள்ளித் தாளாளர் எஸ்.முகம்மது இக்பால் வரவேற்றார். பள்ளியின் முதல்வர் எல்.மாஜிதா பர்வீன்  நன்றி தெரிவித்தார்.

News

Read Previous

காவல்துறை-பொது மக்கள் நட்புறவு விளையாட்டு போட்டி

Read Next

ஹஜ் வழிமுறைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *