பரமக்குடி-முதுகுளத்தூர் இடையே சாலையோர மரங்களுக்கு தீவைக்கும் மர்ம கும்பல்

Vinkmag ad

பரமக்குடி-முதுகுளத்தூர் இடையே சாலையோர மரங்களுக்கு தீவைக்கும் மர்ம கும்பல்

பரமக்குடி : பரமக்குடி-முதுகுளத்தூர் சாலையோரங்களில் உள்ள மரங்களை வெட்டுவதற்காக சில மர்ம நபர்கள் தீ வைப்பதும், ஆசீட் ஊற்றுவதால், மரங்கள் பட்டுபோய் சாலைகளில் விழுந்து, போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.பரமக்குடி-முதுகுளத்தூர் சாலையின் இருபக்கங்களிலும் புளிய மாரங்கள் அதிகமாக உள்ளது. இதனால் சாலையில் மண் அரிப்பையும், இருசக்கர வாகனங்களில் செல்வோரை வெயிலின் தாக்கத்திலிருந்து காத்து வருகிறது. இந்நிலையில் மரங்களை வெட்டும் மர்ம கும்பல்கள் தற்போது சாலையோர மரங்களை வெட்டுவதற்கு களம் இறங்கியுள்ளனர். இவர்கள் இதற்காக சில தந்திர வேலைகளை செய்து வருகின்றனர்.

இரவு நேரங்களில் சாலைகளில் வாகனங்களின் எண்ணிகை குறைந்து விடுவதால், மர்ம நபர்கள் மரங்களின் அடிப்பகுதியில் ஆசீட்டை ஊற்றி விடுகின்றனர். மேலும், மரங்களில் அடிப்பகுதியில் தீ வைத்து விட்டு சென்று விடுகின்றனர். மரம் பட்டு விட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, சில நாட்களில் அதை வெட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் பரமக்குடி-முதுகுளத்தூர் சாலைகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. சில சமயங்களில் மரங்கள் சாலைகளில் விழுவதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று, பரமக்குடி-முதகுளத்தூர் சாலையோரத்தில் மர்ம நபர்களின் சமூக விரோத செயல்களுக்கு உள்ளான மரங்கள் காற்றின் வேகத்திற்கு தாக்குபிடிக்காமல் சாலைகளில் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பட்டுபோன மரங்களை அகற்றுவதுடன், மரங்களை அழிப்பதற்காக தீ மற்றும் ஆசிட் வைக்கும் கும்பலை பிடித்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News

Read Previous

இஸ்லாமிய மார்க்கம் மத துவேசத்தை தூண்டியதா?

Read Next

இந்தியாவை இருள் சூழ்கிறது – நீதிபதி மார்க்கண்டே கட்ஜு

Leave a Reply

Your email address will not be published.