சரவண பொய்கை ஊரணியில் கற்கள் பெயர்ந்து விழுவதால் தடுப்புச்சுவர் சேதம்

Vinkmag ad

முதுகுளத்தூரில் ஊரணி தடுப்புச்சுவர் கற்கள் பெயர்ந்து விழுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முதுகுளத்தூர் நகரின் மையப்பகுதியில் சரவண பொய்கை ஊரணி உள்ளது. இந்த ஊரணி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நகரில் உள்ள அனைத்து தெருக்களில் இருந்து வரும் சாக்கடை சங்கமிக்கும் ஊரணியாக இருந்து வந்தது. இதனால் ஊரணியில் இருந்து வரும் சாக்கடை துர்நாற்றம் நகர் முழுவதும் வீசியது. மேலும் ஊரணியின் அருகில் வீடுகள், பள்ளி, கோவில், கடைவீதிகள் மற்றும் பொதுமக்கள் நடமாடும் பகுதியாக இருந்தது. இதனால் ஊரணியை தூர்வார வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்தனர்.

இதன் எதிரொலியாக கலெக்டர் அரசுக்கு ஊரணியை தூர்வார பரிந்துரை செய்தார். இதனால் நபார்டு வங்கி உதவியுடன் ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பினனர் ஊரணியை தூர்வாரி கரை முழுவதும் நடைபாதை, கம்பி வேலி அமைத்து சீரமைக்கப்பட்டது. நடைபயிற்சி மேற்கொள்ளவும் வசதி அமைக்கப்பட்டது. ஊரணி முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு பேரூராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் ஊரணியை முறையாக சீரமைக்காமல் தடுப்புச் சுவரில் உள்ள முண்டு கற்கள் அனைத்தும் பெயர்ந்து விழுந்து கொண்டிருக்கிறது. ஊரணியை சுற்றி கருவேல மரங்கள் முளைத்து தடுப்பு சுவர்களில் உள்ள கற்கள் பெயர்ந்து விழ காரணமாகிறது. ஊரணியில் உள்ள படிக்கட்டுகள் அனைத்தும் உடைந்து போதிய பராமரிப்பின்றி இருக்கின்றது. இரவு நேரங்களில் மின் விளக்குகள் அணைக்கப்படுவதால் மது பிரியர்களின் கூடாரமாக மாறி விடுகிறது.

இதுகுறித்து கோபிநாதன் கூறுகையில், துர்நாற்றம் வீசிய ஊரணி ரூ.80 லட்சம் செலவில் பராமரிக்கப்பட்டது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் காலை, மாலை நேரங்களில் நடபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஊரணியை சுற்றியுள்ள தடுப்பு சுவரில் உள்ள கற்கள் பெயர்வதை தடுக்கவும், கருவேல மரங்களை அகற்றவும், மின் விளக்குகள் அதிக நேரம் எரிய வைப்பதோடு, மது குடிப்போர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

News

Read Previous

துபாய் கலதாரி டிரைவிங் பள்ளியில் பயிற்சி பெறும் போது கட்டண சலுகை பெற………

Read Next

மௌத்தை மறந்து வாழும் மனிதர்களால் மட்டுமே இப்படி வாழ முடியும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *