கொளுந்துரை, தெற்கு மூக்கையூரில் கட்டாயம் தேவை சமுதாயக்கூடம்

Vinkmag ad

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே கொளுந்துரையில், 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. சமுதாய கூடம் வசதியில்லை. ஊராட்சியில் நடத்தப்படும் கிராமசபை கூட்டங்கள், வீடுகளில் நடக்கும் விஷேசங்கள், திறந்த வெளியில் தனியார் இடங்களில் நடத்தப்படுகிறது. மழை காலங்களில், நிகழ்ச்சி நடத்த சிரமமாக இருக்கிறது. 10 கி.மீ., தூரமுள்ள பரமக்குடி, 16 கி.மீ., தூரமுள்ள முதுகுளத்தூரில், பல ஆயிரம் ரூபாய் செலவழித்து, நிகழ்ச்சி நடத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ., முருகன்: அடுத்த நிதியாண்டில், சமுதாய கூடம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.கடலாடி: கடலாடி ஒன்றிய குழு தலைவர் மூக்கையா: தெற்கு மூக்கையூரில் 2000 பேருக்கு மேல் வசிக்கின்றனர். இங்கு, தனியார் நடுநிலைப் பள்ளி மட்டும் உள்ளது. பொது கட்டடம் இல்லை. அரசு, மற்றும் கிராமத்தினர் சுப நிகழ்ச்சி நடத்த 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து, பந்தல் அமைப்பதன் மூலம் கூடுதல் செலவை ஈடுகட்ட முடியாமல் கடன் வாங்கி அவதிப்படுகின்றனர். சமுதாயக் கூடம் கட்டி கொடுத்து, குறைந்தளவு கட்டணம் வசூலித்தாலும், ஊராட்சிக்கும் வருவாய் கிடைக்கும். மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அமைச்சர் சுந்தரராஜ்: ஒன்றிய பொது நிதியில் சமுதாயக் கூடக் கட்டடம் கட்டித் தரப்படும். ஒரு வாரத்தில் பணி துவங்கும், என்றார்.

News

Read Previous

வீரபாண்டிய கட்டபொம்மன்

Read Next

குவைத்தில் விளையாட்டு மற்றும் இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சிகள்

Leave a Reply

Your email address will not be published.