கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகல துவக்கம்

Vinkmag ad

முதுகுளத்தூர், கடலாடி, கமுதி தாலுகாக்களைச் சேர்ந்த 100 ஊர்களில் கிருஷ்ண ஜயந்தி 3 நாள் விழா செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் யாதவர் சமூகத்தினர், ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியை வெகு உற்சாகமாக கொண்டாடுகின்றனர். கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள், உறியடித்தல், பட்டி மன்றம், சுவாமி பவனி, இன்னிசை கச்சேரி, நடனம், அன்னதானம் ஆகியவை ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி உற்சவத்தில் இடம் பெறுகின்றன.

முதுகுளத்தூர் தாலுகாவில் தட்டாங்குடியிருப்பு, அலங்கானூர், சாத்தனூர், கொழுந்துரை, மீசல், உடைகுளம், சாம்பகுளம், புது பட்டணம், விளங்களத்தூர், வெங்கலகுறிச்சி, செல்வநாயகபுரம், தேரிருவேலி, அணிகுருந்தான், கையகம், கீழச்சிறுபோது, மேலச்சிறுபோது, கருமல், தட்டானேந்தல், கடலாடி தாலுகாவைச் சேர்ந்த கண்டிலான், பூக்குளம், ஓரிவயல், மாரந்தை, சிறுகுடி, கடையாக்குளம், ஆலங்குளம், மேலச்செல்வனூர், கோட்டையேந்தல்,

உசிலங்குளம், தனிச்சியம், சாயல்குடி, பெரியகுளம், கிருஷ்ணாபுரம், கமுதி தாலுகாவைச சேர்ந்த பாக்கு வெட்டி, மருதங்கநல்லூர், கொல்லங்குளம், காடநகரி, அகத்தாரிருப்பு, நரியன் சுப்பராயபுரம், ஏ.தரைக்குடி, அச்சங்குளம், உடையநாதபுரம், இடையங்குளம் உள்பட 100 ஊர்களில் ஸ்ரீகிருஷ்ணர் ஜயந்தி விழா தொடங்கியது. 3 நாள்களுக்கு இந்த திருவிழா நடைபெறும்.

கிராமங்கள் திருவிழாக் கோலமாக காட்சி அளிக்கிறது. விழாவை முன்னிட்டு,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.என்.மயில் வாகனன் உத்தரவில், கமுதி உதவி காவல் கண்காணிப்பாளர் வி.விக்ரமன், துணை காவல் கண்காணிப்பாளர்கள் நடராஜன், சோம சேகர் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News

Read Previous

ஊடகம் — கவிமகன் காதர் (எ) மு.ச. அப்துல் காதர்

Read Next

சென்னை மாநகரில் இயக்கப்படும் ஆட்டோக்களில் வசூலிக்கப்பட வேண்டிய கட்டண பட்டியலை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.