ஊடகம் — கவிமகன் காதர் (எ) மு.ச. அப்துல் காதர்

Vinkmag ad

ஊடகம் !

நிழல்களை உரசுவதல்ல …

நிஜங்களை ஊடுருவிச் செல்வது !

 

எத்தனை முகங்கள் உனக்கு?

எழுத்தென, ஒலியென, ஒளியென,

காற்றில் கலக்கும் அலையென,

கல்லோ மண்ணோ எதுவுமில்லாமல்

கணிணியில் இணைக்கும் தளமென

இன்னும் எத்தனை முகங்கள் உனக்கு?

 

இருபக்கம் கூர்கொண்ட

இரும்புக்கத்தி !

இதயத்தைத் திறக்கவும்,பிளக்கவும்

 

இமைக்கின்ற பொழுதுக்குள்

இமயத்தை தகர்த்து விடும்

காகிதத்தில் செய்திட்ட

கனரக ஆயுதங்கள் !

இருந்தும் ஏன்

நடிகைகளின் கதைபேசும்

சதை வியாபாரியாக

அக்கிரமம் சமைக்கின்ற

அமெரிக்க அடிமையாக,

இஸ்ரேலின் காலடியில்

இழிநிலைக் குப்பையாக

இரைந்து கிடக்கின்றாய் !

சிச்சீ இறந்து கிடக்கின்றாய் !

 

ஏய் ஊடகதர்மமே ! உந்தன்

மற்றொரு பேரென்ன பாபரி மஸ்ஜிதா?

உன்னை இடித்து தகர்த்திட இலட்சம்

பேர்

ஆனால் கட்டி எழுப்பிட எவருமில்லை !

 

பெற்றவரே ஆனாலும்

பிறழாத நீதிதர

பகர்ந்திட்ட பெருமானார்

பொன்மொழிகள் புரிந்திட்டால்

அதுபோதும் ஊடகமே

உயிரோடு நீ வாழ !

 

நீதியின் வேர்கள் காயாதிருக்க

நெஞ்சுரத்தோடு செந்நீர் பாய்ச்சும்

நல்லசில ஊடகங்கள் மீது

நம்பிக்கை வைப்போம் ! அவற்றை

நம்பிக்கை வைப்போம் !

( நன்றி :  மணிச்சுடர் ரமளான் சிறப்பு மலர் 2011 )

News

Read Previous

கருணை நபி புகழ்க்காவியம்

Read Next

கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகல துவக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *