கணவர் உடலை கொண்டு வர மனைவி முறையீடு

Vinkmag ad

முதுகுளத்தூர்: சவுதியில் இறந்த, கணவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்ககோரி, அவரது மனைவி மற்றும் குடும்பத்தார்கள் கலெக்டரிடம் கண்ணீர் மல்க முறையிட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே தஞ்சாக்கூரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 40. இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், சவுதியில் உள்ள அல்கோபார் (தமாம்) என்ற பகுதியில் ஒரு கம்பெனியில் கூலி வேலை செய்து வந்தார். ஜன., 18ல்,
இவருக்கு திடீரென உடல்நலக் குறைவு
ஏற்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்ததாக, அங்குள்ள உறவினர்கள் ராஜேந்திரனின் மனைவி கோமதிக்கு தகவல் கொடுத்தனர். இதை
யடுத்து, அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி, காக்கூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற கலெக்டர் நந்தகுமாரிடம் கோமதி மற்றும் கணவரின் குடும்பத்தார்கள்
கண்ணீர் மல்க முறையிட்டனர். இறந்த ராஜேந்திரனுக்கு 2 பெண் குழந்தைகள்
உட்பட 3 குழந்தைகள் உள்ளனர்.
கோமதி கூறுகையில், “”குடும்ப வறுமை காரணமாக, கடன் வாங்கி கணவரை
சவுதிக்கு அனுப்பி வைத்தோம். அங்கு உடல்நிலை சரியில்லாமல் இறந்ததாக
அங்குள்ள உறவினர் சிலர் போன் மூலம்
தகவல் தெரிவித்தனர். இறந்த கணவரின் முகத்தை ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் குடும்பத்தார்
களுக்கும் உள்ளது. எனவே, அவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம் முறையிட்டுள்ளேன்” என்றார். கலெக்டர் கூறுகையில், “” இந்திய தூதரக அதிகாரிகள் மூலம், ராஜேந்திரன் உடலை, இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

News

Read Previous

முதுகுளத்தூரில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

Read Next

தேசிய வாக்காளர் தின ஊர்வலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *