ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் பூண்டு

Vinkmag ad
ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் பூண்டு
First Published : 18 Aug 2010 05:34:13 AM IST
வாஷிங்டன், ஆக. 17: பூண்டு சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்த முடியும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.    ஆஸ்திரேலியாவில் இருக்கும் அடிலெய்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. பச்சை பூண்டு, சமைக்கப்பட்ட பூண்டு மற்றும் பூண்டு பொடி ஆகியவற்றை சாப்பிடுவதை விட பூண்டுச் சாறை சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்துவதில் முழுப் பயன் இருக்கும்.

  12 வாரங்களாக, ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் 50 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரத்த நாளங்களை ஆசுவாசப்படுத்தும் நைட்ரிக் அமிலம் மற்றும் ஹைட்ரஜன் சல்ஃபைடு பூண்டில் இருப்பதால் ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்த முடிகிறது என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. 

News

Read Previous

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பேது என்று….

Read Next

கருணையாளா உன்னிடம்…..

Leave a Reply

Your email address will not be published.