மதுரை காமராஜர் பல்கலையில் அக்குபஞ்சர் தெரபி சான்றிதழ் பயிற்சி

Vinkmag ad

மதுரை காமராஜர் பல்கலைக்கழக வயது வந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவுப் பணித்துறையில், 3 மாத கால அக்குபஞ்சர் தெரபி சான்றிதழ் பயிற்சி வகுப்பு ஜூலை 2-ம் தேதி துவங்குகிறது.

இது தொடர்பாக, இத்துறை திட்ட அலுவலர் (பொறுப்பு) எம்.சாந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பது:

இப்பயிற்சியில் ஆண், பெண் இருபாலரும் சேர்த்துக் கொள்ளப்படுவர். பயிற்சி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். 3 மாதத்தில், வாரந்தோறும் புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மட்டுóம் பயிற்சி நடக்கும்.

பத்தாம் வகுப்பு தேறியவர்கள் மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் பங்கேற்க தகுதியுடையவர்கள்.

பயிற்சியில், சீன மருத்துவத்தின் தன்மை, வகைப்பாடுகள், சீன மருத்துவ வரலாறு, அறிவியல் சார்ந்த கூற்றுகள், சிகிச்சைக்கு உபயோகிக்கப்படும் ஊசிகளின் வகைகள் மற்றும் பயன்பாடுகள், அக்குபஞ்சர் சிகிச்சைக்குரிய புள்ளிகளைக் கண்டறிதல், அடிப்படைத் தத்துவங்கள், சிகிச்சை செய்யும் முறைகள், இயற்கை மருத்துவம், யோக, உணவு சிகிச்சை, மனித உடல் அமைப்பு, உடல் செயல்படும் முறைகள், முக்கிய நோய்கள், விளக்கம் மற்றும் சிகிச்சை முறைகள் செய்முறைப் பயிற்சியுடன் நேரடி அனுபவ பயிற்சியும் அளிக்கப்படும்.

பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு பல்கலைக்கழக சான்று வழங்கப்படும். முதல் உதவி பயிற்சியுடன் கூடிய சான்று வழங்கப்படும். இப்பயிற்சி தொடர்பான தெளிவான விளக்கங்கள் மற்றும் விண்ணப்பப்படிவம் பெற, திட்ட அலுவலர் (பொறுப்பு), வயது வந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவாக்கப் பணித்துறை, மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம், அழகர்கோவில் சாலை, மதுரை-2 என்ற முகவரியை நேரில் அணுகலாம். தொலைபேசி 0452-2537838 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

News

Read Previous

ஜூன் 24……. கவியரசரின் பிறந்த நாள்….

Read Next

Project Madurai திட்டத்தின் அனைத்து நூல்கள்

Leave a Reply

Your email address will not be published.