வியாதிக்கு டாடா சொல்லுங்கள்

Vinkmag ad

  பாகற்காயை நறுக்கி காயவைத்துத் தூளாக்கிக் கொள்ளுங்கள். இதில் ஒரு தேக்கரண்டி தூளை ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்துவர அல்சர் சீக்கிரமே குணமாகிவிடும்.
 வறட்டு இருமல் குணமாக, மாதுளம் பழச்சாற்றுடன் இஞ்சிச்சாறு, தேன் கலந்து மூன்று வேளையும் அருந்தி வர வறட்டு இருமல் காணாமல் போகும். தொண்டைக்கும் இதம் கிடைக்கும்.

 தொண்டைக்கட்டு குணமாக துளசி, தூதுவளை,
மிளகுப் பொடி தலா 5 கிராம் எடுத்து தேன்விட்டுக் குழைத்து நாளொரு வேளை என மூன்று நாள்கள் உட்கொள்ள சளி, தொண்டைக்கட்டு நீங்கிவிடும்.

 உணவில் அடிக்கடி கொள்ளு ரசம், கொள்ளுத் துவையல் சேர்த்தால் கொழுப்பு கரைந்து உடல் பருமன் குறையும்.

 வாழைத்தண்டு சாறு சிறுநீரகக் கற்களை அகற்றும்.

 சிறுநீரகக் கோளாறுகளுக்கு நல்ல மருந்து “நெருஞ்சில்’ ஆகும். சிறுநீரகப் பாதைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். அன்யூரியா எனப்படும் சிறுநீர் தடைப்பட்டு, வலியுடன் வெளிவரும் நோய்க்கு – நெருஞ்சில் சேர்த்த “கோக் சூராதிக்ருதம்’ – நல்ல மருந்தாகும்.

 வல்லாரை லேகியத்தை காலையிலும், இரவிலும் 4 கிராம் சாப்பிட்டு பால் பருகி வர, உடல் சூடு நீங்கும். மூளையைப் பலப்படுத்தும்.

News

Read Previous

மாணவர்களுக்கு பருவகால மழையை முன்னிட்டு ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய அறிவுரைகள்

Read Next

தகவல் அறியும் உரிமை சட்டம்: தகவல் கோரும் விண்ணப்பம் அனுப்பும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *