ரத்தத்தில் இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவு

Vinkmag ad
ரத்தத்தில் சர்க்கரை அளவு, சாப்பிடுவதற்கு முன் 60 முதல் 110 மி.கி.-க்குள் இருக்க வேண்டும். சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 80 முதல் 140 மிகி.முக்குள் இருக்க வேண்டும்.

கணையத்தில் இன்சுலின் என்ற இயக்கநீர் சுரக்காமல் போவதால் அல்லது சுரக்கும் அளவு குறைவதால் அல்லது சுரக்கும் இன்சுலின் சயாக வேலை செய்யாததால் சர்க்கரை நோய் வருகிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ்தான் சர்க்கரை என்று அழைக்கப்படுகிறது. இந்த குளுகோûஸ உடலுக்குத் தேவைப்படும் ஆற்றலாக மாற்றும் சக்தி இன்சுலினுக்கு உண்டு. இன்சுலின் சுரப்பது குறைந்து போனால் அல்லது அறவே சுரக்காமல் இருந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடி விடுகிறது.
நீங்கள் நாக்குக்கு அடிமையா? சர்க்கரை நோயாளிகளைப் பொருத்தவரை நோய்தீவிரமாவது அல்லது குறைவது எல்லாம்சாப்பாட்டில்தான் இருக்கு. நாக்குக்கு அடிமையானவர்களால் சர்க்கரை நோயை வெல்ல முடியாது. ருசிக்குச் சாப்பிடாமல் பசிக்குச் சாப்பிட வேண்டும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு உணவுக் கட்டுப்பாடு மிக அவசியம். நோய் வர வாய்ப்பு உள்ளவர் என்ற நிலையில் இருப்பவர்களும் உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். உணவே மருந்து, அவ்வாறு இல்லையெனில் மருந்தே உணவாகிறது.
அறிகுறிகள்: சர்க்கரை நோய்க்கென குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதும் தொடக்கத்தில் தெரியாது. அடிக்கடி சிறுநீர் கழித்தல், தாகம் ஏற்பட்டு அடிக்கடி தண்ணீர் குடித்தல், அதிகமாகப் பசி எடுத்தல், உடல் சோர்வு, எடை மிக வேகமாகக் குறைதல், சிறுநீர் வெளியாகும் இடத்தில் அரிப்பு ஆகியவை சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள்.
சர்க்கரை நோயின் தன்மைக்கு ஏற்ப இன்சுலின் ஊசி மருந்து அல்லது மாத்திரை ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ள டாக்டர் பந்துரைப்பார். ஆனால் சாப்பாட்டு விஷயத்தில் நோய் உள்ளவர்கள், நோய் வருவதற்கு வாய்ப்புள்ளவர் என அனைவரும் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும்.
என்னதான் ஊசி மருந்து, விலை உயர்ந்த மாத்திரை என எடுத்துக் கொண்டாலும் சாப்பாட்டில் கட்டுப்பாடு இல்லையென்றால் எல்லாம் வீணாகிவிடும்.
வாணிஸ்ரீ சிவகுமார்

News

Read Previous

கூகுள், யாஹூ-விற்கு போட்டியாக பி.எஸ்.என்.எல் களமிறக்கும் உலகத்தரம் வாய்ந்த புதிய ‘இ-மெயில்’ சேவை

Read Next

எளிய தமிழில் MySQL

Leave a Reply

Your email address will not be published.