புற்றுநோயை குணப்படுத்தும் ஒட்டக பால்

Vinkmag ad

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில்
இருந்து ஒரு வகை மருந்தை தயாரித்துள்ளனர். இந்த மருந்து புற்று நோயை
குணமாக்கும் தன்மை உடையது என் தெரியவருகிறது
விஞ்ஞானிகள் எலிக்கு புற்று நோயை உருவாக்கி இந்த மருந்தை 6 மாத காலமாக
எலிக்கு செலுத்தி வந்தனர் . எலி உடலில்/ இருந்த புற்றுநோய்
செல்கள் அகன்று வீரியத்துடன் கூடிய புதியசெல்கள் உருவாகின, இதில் எலிக்கு
புற்றுநோய் முற்றிலும் குணமாகிவிட்டது.
ஒட்டக பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து தயாரிக்கபடும் இந்த மருந்து
உடலில் நோய்-எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது . இது புற்றுநோய் செல்களை
அளித்து-விட்டு புதிய செல்களை உருவாக்குகிறது.
இந்த மருந்தால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படுவது இல்லை. எனவே
மனிதர்களுக்கும் இந்த-மருந்தை பயன்படுத்தி புற்றுநோயை சரியாக்கி விடலாம்
என்று விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள். அடுத்த கட்டமாக
மனிதர்களுக்கு இந்த\ மருந்தை செலுத்தி ஆய்வுசெய்ய இருக்கிறார்கள்

மருத்துவ குணம் நிறைந்த ஒட்டகப் பால்

மருத்துவ குணம் நிறைந்த ஒட்டகப் பால்

நம்மில் பலர் பசும் பால் அல்லது எருமைப் பாலை அருந்தியிருப்போம். ஏன்,
தமிழக கிராமங்களில் ஆட்டுப் பால் கூட குடித்திருப்பார்கள்.

ஆனால் ஒட்டகப் பால் பற்றி அறிந்திருக்கிறீர்களா? ஒட்டகப் பாலின் மருத்துவ
குணங்கள் அளவிடற்கரியது.

ஒட்டகப் பாலில் உள்ள மருத்துவ பலன்களில் ஆண்மையின்மையை போக்கும் பலனும் உள்ளது.

இந்திய சந்தையில் ஒட்டகப் பாலுக்கு உள்ள வரவேற்பைப் பயன்படுத்திக்
கொள்ளும் விதமாக ராஜஸ்தான் பால் சங்கம் (ஆர்எம்எஃப்) அண்மையில் ஒட்டகப்
பால் பாக்கெட்டுகள் விற்பனையை அறிமுகப்படுத்தியது.

தற்போது ஒட்டகப் பால் பாக்கெட்டுகள் ஜெய்ப்பூர், பிகானிர், புதுடெல்லி
மற்றும் புதுடெல்லியில் உள்ள சராஸ் பால் கடைகளில் கிடைக்கின்றன.

வாடிக்கையாளர்களுக்கு ஒட்டகப் பாலின் மருத்துவ குணங்கள் தெரிந்திருந்த
போதிலும், நகர்ப்புறங்களில் ஒட்டகப் பால் கிடைப்பதில்லை. தற்போது
ஆர்எம்எஃப்-ன் சராஸ் கடைகளில் இது கிடைக்கிறது.

ஒட்டகப் பாலில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் தவிர ஆண்மையின்மையை
போக்கக்கூடிய திறனுடன் சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில், ஒட்டகப் பாலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக
ஆர்எம்எஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒட்டகப் பாலில் ஐஸ் கிரீம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன்முதலாக ஒட்டகப் பாலில் ஐஸ் கிரீமைத்
தயாரித்து சந்தையில் வெளிவிட அல் அய்ன் டெய்ரி எனும் நிறுவனம் முடிவு
செய்துள்ளது.

ஒட்டகப் பால், அரேபியப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விரும்பும் முக்கிய
உணவுப் பொருளாகும். பசும்பாலை விட ஒட்டகப் பாலில் சிறிது உப்புச்சுவை
அதிகமாக இருக்கும். இப்போது அல் அய்ன் டெய்ரி நிறுவனம் ஒட்டகப் பாலில்
இருந்து சுவையான ஐஸ் கிரீமைத் தயார் செய்ய முடிவு செய்துள்ளது. “இப்போது
சந்தையில் இல்லாத ஒரு புது வகையான ஐஸ் கிரீமை உருவாக்க வேண்டும் என்பதே
எங்கள்
நோக்கம். பல்வேறு சுவையுடன் கூடிய ஐஸ் கிரீம்களை உருவாக்கும்
முயற்சியில் நீண்ட நாள்களாக ஈடுபட்டு வருகிறோம். இது இந்த ஆண்டின்
மத்தியில் விற்பனைக்கு வரும்’ என்று அந்நிறுவனத்தின் செயல் இயக்குநர்
சயிஃப் அல் தர்மகி தெரிவித்தார்.
இந்த ஐஸ் கிரீம், பசும்பால் கலப்பு இல்லாமல் சுத்தமான ஒட்டகப் பால் மூலம்
தயாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சர்க்கரை வியாதிக்கு ஒட்டகப்பால்: ஆய்வு முடிவு!

சர்க்கரை வியாதியை ஒட்டகப்பால் குறைக்குமென புதியதொரு ஆராய்ச்சி முடிவு
தெரிவித்துள்ளது. பிகானரியிலுள்ள டயபட்டிக்ஸ் அன்ட் கேர் ரிசர்ச்
சென்டரில் பணியாற்றும் மருத்துவர் ராஜேந்திர அகர்வாள் நடத்திய இது
தொடர்பான ஆய்வில் இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.

எகிப்திலுள்ள கெய்ரோ பல்கலை கழகத்தில் 54 சர்க்கரை நோயாளிகளுக்கு நடத்திய
ஆய்விலும் ஒட்டகப்பால் சர்க்கரை நோயைக் குணமாக்குகிறது என்பது
உறுதியாகியுள்ளது. இன்சுலின் ஊசி மருந்து தினசரி உபயோகித்துக்
கொண்டிருந்த 27 பேருக்குத் தினசரி அரை லிட்டர் ஒட்டகப்பால் கொடுத்து
சோதிக்கப்பட்டது. இந்த 27 பேருக்கும் சர்க்கரை வியாதி நாளுக்கு நாள்
குறைந்து வருவது உறுதியானது.
ஒட்டகப்பால் குடிக்காத மற்ற 27 நோயாளிகளின் நோயில் மாற்றமில்லை.

ஒட்டகப்பாலில் இரும்பு, துத்தநாகம், தாமிரம் முதலான தனிமங்களும்
வைட்டமின் C யும் அதிக அளவில் அடங்கியுள்ளதும் கெய்ரோ நேசனல்
நியூட்ரீசியன் இன்ஸ்டிடியூட்டில் நடத்திய சோதனையில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய கண்டுபிடிப்புக்கும் அரபு நாடுகளில் வசிப்போருக்குச் சர்க்கரை
நோய் அதிக அளவில் இல்லாமல் இருப்பதற்கும் தொடர்பிருக்கலாம் என்ற கருத்து
வலுவாகியுள்ளது.

நன்றி: www.inneram.com

News

Read Previous

ஒரு பாறையின் மகத்தான சரித்திரம்

Read Next

அதிகாலை ஆண்கள்

Leave a Reply

Your email address will not be published.