பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 பயன்கள்!!!

Vinkmag ad

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 பயன்கள்!!!   

இந்தி மொழியில் பாகற்காயைக் கரேலா என்று குறிப்பிடுவார்கள். இதனைஆங்கிலத்தில் Bitter Gourd, Bitter Melon மற்றும் Bitter Squash என்று அழைப்பார்கள். இதன் பொருள் கசப்பான காய் என்பதாகும். ஆங்கிலத்தில் இதன் பெயரைஉச்சரிக்கும் பொழுதுஇதன் பெயரிலேயே உள்ள கசப்புச் சுவை தான் நினைவுக்கு வரும். இவை வளரும் பகுதியின் தன்மைக்கேற்ப கரும்பச்சை நிறமாகவோ அல்லது இளம்பச்சை நிறமாகவோ இவற்றின் நிறம் இருக்கும். இதன் சுவை கசப்பாக இருந்தாலும்இதில் உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும்வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. 

 

பாகற்காயை ஜூஸ் எடுத்தும் அருந்தலாம். மேலும் ஊறுகாய்பொரியல்,வறுவல்தொக்குகுழம்புகூட்டு என்று ஏராளமான உணவு வகைகளில் பயன்படுத்தலாம். பாகற்காயில் அடங்கியுள்ள சத்துக்கள்: வைட்டமின் ஏபிசி,பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள்லூடின்இரும்புச்சத்துஜிங்க்,பொட்டாசியம்மாங்கனீசுமக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன. இப்போது அந்த பாகற்காய் மூலம் கிடைக்கும் ஏராளமானபலன்களில் ஒரு சிலவற்றைப் பற்றி பார்க்கலாமா!!!

சுவாசக் கோளாறுகள்

பசுமையான பாகற்காய்கள்ஆஸ்துமாசளிப் பிடித்தல்இருமல் போன்றவற்றைத் தீர்ப்பதில் மிகச்சிறந்த நிவாரணியாகப் பயன்படுகின்றன.

 

கல்லீரலை வலுப்படுத்துதல்

தினந்தோறும் ஒரு டம்ளர் பாகற்காய்ச் சாற்றினை அருந்தினால்ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். அதிலும் ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால்இதன் பலனைக் காணலாம்.

 

நோயெதிர்ப்புச் சக்தி

பாற்காயையோஅதன் இலைகளையோ வெந்நீரில் வேக வைத்து தினந்தோறும்சாப்பிட்டு வந்தால்நோய்த்தொற்றுகள் அண்டாமல்உடலின் நோயெதிர்ப்புச் சக்தி கூடும்.

 

பருக்கள்

பாகற்காயை உண்டு வந்தால்சருமத்தில் உள்ள பருக்கள்கருப்பு தழும்புகள்,ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவை நீங்கும். பாகற்காயை சாறு எடுத்து,அதனுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்துதினந்தோறும் வெறும் வயிற்றில் 6மாதம் அருந்தி வந்தால்கண்கூடாகப் பலனைக் காணலாம்.

நீரிழிவு நோய்

டைப் நீரிழிவு நோயை (type 2 DIABETES) எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டுஇரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

மலச்சிக்கல்

பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால்அது செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது. இதன் காரணமாக உணவு நன்றாக செரிக்கப்பட்டுகழிவுகள் எளிதாக வெளியே தள்ளப்படுகிறது. இதன் மூலம் மலச்சிக்கல் நீங்குகிறது. சிரமமின்றி மலம் கழிக்க முடிகிறது.

 

சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை

ஆரோக்கியமான சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் பேணுவதற்கு பாகற்காய் மிகவும் உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இதுஉதவுகிறது.

 

இதய நோய்

பாகற்காயை தினமும் சாப்பிட்டு வந்தால்உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் நீக்கப்பட்டுஇதய நோய் எளிதில் வருவதைத் தடுக்கிறது.

புற்றுநோய்

புற்றுநோய் செல்கள் பல்கிப் பெருகுவதை பாகற்காய் தடுக்கிறது.

 

எடை குறைதல்

உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்யும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்பாகற்காயில் நிறைந்துள்ளன. உடலின் செரிமான மண்டலத்தை நன்றாகத் தூண்டிநல்ல செரிமானத்தை உண்டாக்குகிறது. இதனால்உடலுக்குத் தேவையான சத்துக்கள் உறிஞ்சப்பட்டுவேகமாக உடல் எடையை குறைக்கிறது.

Bitter gourds are one of the Indians favourite vegetables. Those who cherish bitter gourds buy them at any price when there is the season of bitter gourds. The bitter gourd usually five to six inches long. Bitter gourds are bitter in taste, stimulant of gastric fire, light to digestion, warm, purgative, soothing and conducive to digestion. They are excellent appetizer and cure cough, windiness, blood impurities, fever, worms, bile, anemia and leucoderma.

 

 

Health Benefits of Bitter Gourd juice

 

Bitter gourd juice purifies blood. It is an excellent appetiser. It eliminates the worms thriving in the Intestine. It gives relief in piles.  It is diuretic it relieves the burning in the kidneys, it dissolves kidney-stone Bitter gourd is advantageously effective in the cases of diabetes. A glass of bitter gourd juice taken on an empty stomach is beneficial to the patients suffering from arthritis and jaundice.

News

Read Previous

நூலகவாசியின் குறிப்புகள்

Read Next

உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள்…. ஒருநாள் உங்களுக்கே உதவ நேரிடலாம்…..

Leave a Reply

Your email address will not be published.