பல் வலிக்கு வீட்டில் மருந்து இருக்கு

Vinkmag ad

பல் வலிக்கு வீட்டில் மருந்து இருக்கு

நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடுகு, மிளகு, அல்லது பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகை வலி நிவாரணிகள் உள்ளன. பல் வலியை குறைக்க இவைகளை சிறப்பாக பயன்படுத்த முடியும். பல் வலிக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு இயற்கையாக குணப்படுத்த வேண்டும் என்ற குறிப்புகளை கீழே தெரிந்து கொள்ளலாம்.

பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டும்.

கடுகு எண்ணை, பல் வலியை குறைக்க மற்றொரு இயற்கையான நிவாரணி. கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும்.

எலுமிச்சை சாறின் பல துளிகள் பல் வலியை குறைக்கலாம்.

வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பல் பகுதியின் மேல் வைப்பதன் மூலம் பல் வலியை சிறப்பாக குறைக்க முடியும். வெங்காயத்தின் சாற்றை வலி உள்ள இடத்தில் தேய்க்கலாம்.

சாமந்தி, வேலம், போன்ற மூலிகை மருந்துகளை கொண்டு நீங்கள் வீட்டிலேயே பல் வலியை சரியாக்க வாய் கொப்பளிக்கும் நீரை தயாரிக்கலாம்.

துளசி, மற்றும் பெருங்காயம் போன்றவையும் உபயோகமான மருத்துவ மூலிகைகள்.

வலி அதிகமாக இருந்தால் இஞ்சி அல்லது கிரம்பை கடித்தபடி வலி குறையும் வரை சிறிது நேரம் வைக்கலாம்.

பல் வலியை சற்று குறைக்க வெளிப்புறமாக சாதாரண ஐஸ் கட்டிகளை உபயோகிக்கலாம்.

திடீரென்று நீங்கள் பல் வலியால் பாதிக்கப்பட்டால், மிகவும் சூடான, மிகவும் குளிர்ச்சியான, மற்றும் இனிப்பான உணவுகளை தவிர்க்கவும். இவைகள் வலிக்கும் பல்களை மேலும் பாதிக்கும்.

நீங்கள் உங்கள் உணவை பற்றி கவனமாக இருக்கவேண்டும். அதிகமாக காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவைகளை சாப்பிட வேண்டும். மாவு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

டாக்டர் பாஸ்கர்ஜெயராமன்

News

Read Previous

உன் விடியலுக்கு “அகர முதல”

Read Next

வேலைவாய்ப்புகளைக் கொன்றொழிக்கும் கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *