நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த முந்திரி பழம்

Vinkmag ad

முந்திரி வெப்பமண்டல பகுதிகளில் அதிகளவில் சாகுபடியாகிறது. தமிழகத்தில் அரியலூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகளவு பயிர் செய்யப் படுகிறது. ஒரு எக்டேரில் முந்திரி கொட்டையின் விளைச்சல் 500 கிலோவாகும். நம்மிடையே முந்திரி கொட்டைகளை போல முந்திரி பழங்களை பயன்படுத்துவது குறைவு. நாட்டில் உற்பத்தியாகும் 500 டன் முந்திரி பழங்களில் 10 சதவிகிதம் கூட பயன்படுத்துவதில்லை.

ஏனெனில் பழத்தில் உள்ள டானின் எனும் வேதிப் பொருளே காரணம். இதனால் பழம் சாப்பிடும்போது தொண்டையில் கரகரப்பு தன்மை ஏற்படுகிறது. இதனை போக்க பழத்தை நீராவியில் பத்து நிமிடம் வேகவைத்து அல்லது உப்புநீரில் ஊறவைத்து சாப்பிடலாம். மா, பலா, ஆரஞ்சு போன்று அதிக சத்துகள் நிறைந்தது முந்திரிபழம். முக்கியமாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட, முந்திரிபழத்தில் அய்ந்து மடங்கு அதிகமுள்ளது.

வைட்டமின் சி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு நோயை குணமாக்குகின்றது. பற்கள், நகங்களை உறுதிப்படுத்துகின் றது. ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாடு நோயை குண மாக்குகின்றது. மேலும், கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்று வியாதிகளை குணமாக்க பயன்படுகின்றது. இவற்றில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.

மேலும், பழத்தில் டானின் உள்ளதால் ஆன்டி ஆக்ஸி டன்ட் ஆக செயல்படுகின்றது. இச்சிறப்புமிக்க பழத்தில் இருந்து ஜூஸ், சிரப், ஜாம், மிட்டாய் போன்ற மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்து பயன்படுத்தலாம்.


சாறுகளில் உடல்நலம்

இளநீர் சாறு – இளமையை கொடுக்கும்.

 

வாழைத்தண்டு சாறு – வயிற்றுக்கல் போக்கும்.

வல்லாரை சாறு – நரம்பு வலிகளை போக்கும்.

புதினா சாறு – விக்கல் போன்ற நோய்களை நீக்கும்.

நெல்லிக்கனி சாறு – நல்ல அழகை கொடுக்கும்.

துளசி சாறு – தொண்டைச்சளி, சோர்வு நீக்கும்.

முசுமுசுக்கை சாறு – மூக்கு நீர் வற்றும்.

அகத்தி இலை சாறு – அடிவயிற்று மலத்தை நீக்கும்.

Read more: http://www.viduthalai.in/home/viduthalai/medical/80558-2014-05-19-09-25-14.html#ixzz33BycAUdT

News

Read Previous

முதுகுளத்தூரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Read Next

அழகுத் தமிழில் வண்ணப்படங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *