நோயின்றி வாழ 4 வழிகள்

Vinkmag ad

சீன அக்குபஞ்சர் மருத்துவத்தின் படி இரவு 11 மணியில் இருந்து 3 மணி வரை உடலில் கல்லீரல் தொகுப்பு சிறப்பாக வேலை செய்யும் என்று சொல்கிறது. கல்லீரலின் பொதுவான வேலையாக நாம் அறிவது அது செரிமான மண்டலத்தில் முக்கிய பங்காற்றுகிறது என்பது தான் .இது தவிர எஞ்சிய குளுக்கோசை கிளைக்கொஜனாக மாற்றி சேமிக்கிறது . இப்படி கல்லீரல் செய்யும் வகைகள் ஏராளமானவை .

இவ்வளவு வேலைகளையும் தாண்டி கல்லீரலில் முக்கியமான வேலை நம் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை அகற்றும் பணிதான் அது .(DEOXIFICATION ). நாம் உண்ணும் உணவில் நாம் அருந்தும் தண்ணீரில் உடலுக்கு ஒவ்வாத ரசாயனங்களை அகற்றும் முக்கிய வேலையை கல்லீரல்செய்கிறது. கல்லீரல் பழுதடைந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் ஓரிரு நாட்களில் நம்மைக் கொன்று விடும். நச்சுகளை அகற்றும் இந்த முக்கிய வேலையை இரவு 11 மணி துவங்கி அதிகாலை 3 மணி வரை கல்லீரல் செய்கிறது. அதனால் இந்த நேரத்தில் தூக்கம் மிக அவசியமான ஒன்றாகும்.

– நோயின்றி வாழ 4 வழிகள் ( உமர் பாருக் )

News

Read Previous

ஷார்ஜாவில் வாசிப்புத் திறனை மேம்படுத்த உதவும் நூலகம்

Read Next

வாழ்க்கை

Leave a Reply

Your email address will not be published.