சர்க்கரை நோய் குறித்து ஆன்-லைன் கணக்கெடுப்பு

Vinkmag ad

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்று அல்லாத நோய்கள் குறித்து தன்னார்வ நுகர்வோர் அமைப்பு ஆன் -லைன் கணக்கெடுப்பை தொடங்கி உள்ளது.

இது குறித்து இந்த அமைப்பு இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவல்:

முந்தைய தலைமுறையில் பெரும்பாலும் 40 வயதை கடந்தவர்களே சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவது வழக்கம். ஆனால், இன்று 30 வயது இளைஞர்களும் இந்த நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகிய தொற்று அல்லாத நோய்கள் மற்றும் இவற்றின் விளைவாக ஏற்படும் சிறுநீரக மற்றும் இதய பாதிப்புகள் குறித்து இந்திய நுகர்வோர் சங்கம் ஆன்-லைன் கணக்கெடுப்பை தொடங்கி உள்ளது. அதில் சர்க்கரை நோயாளிகள் மேற்கொள்ளும் பரிசோதனைகள், மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் அளவு, சிகிச்சைக்கான மருத்துவ செலவு உள்ளிட்ட 29 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பில் பங்கேற்க விரும்பும் சர்க்கரை நோயாளிகள், தங்களை பற்றிய தகவல்களை www.surveymonkey.com என்ற இணையதளத்தில், மே 25 -ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News

Read Previous

அநீதியான ஆட்சி — Dr.K.V.S. ஹபீப் முஹம்மத்

Read Next

கூகுள், யாஹூ-விற்கு போட்டியாக பி.எஸ்.என்.எல் களமிறக்கும் உலகத்தரம் வாய்ந்த புதிய ‘இ-மெயில்’ சேவை

Leave a Reply

Your email address will not be published.