கோடை வெப்பத்தை தணிக்க இளநீர்

Vinkmag ad

The most important method of producing many useful products. It is natural to give the greatest gift to mankind.

தென்னை தரும் பல உபயோகமான பொருட்களில் மிக முக்கியமானதாகும். இது மனித குலத்துக்கு இயற்கை அளித்திடும் மாபெரும் பரிசாகும். இளநீர்  கோடையின் வெப்பத்தையும், உடல் வெப்பத்தையும் தணிக்க உதவும் ஊட்டச்சத்து குளிர்பானம். 100 கிராம் அளவுள்ள இளநீர் குடிப்பதால் 17.4  கலோரி சக்தி கிடைக்கிறது. இதில் சர்க்கரை மற்றும் தாதுஉப்புகள் மிக அதிக அளவிலும், புரதம் மற்றும் கொழுப்பு சத்துகள் மிக குறைந்த அளவிலும்  காணப்படும்.

இளம் குரும்பைகளில் இளநீர் சர்க்கரை வகைகளில் குளுக்கோஸ் மற்றும் ப்ரக்டோஸ் சத்துகள் காணப்படுகின்றன. தேங்காய் முதிர்ச்சி அடையும்  போது இந்த சத்துகள் குறைகின்றன. 6 மாத வயதுடைய தென்னை இளநீரில் 4.6 சதவீதம் சர்க்கரையும், முற்றிலும் முற்றிய தேங்காயில் 2 சதவீதம்  சர்க்கரையும் உள்ளது. இளநீரில் உடல் வளர்ச்சிக்கு தேவையான தாதுப்பொருட்களான பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு,  கந்தகம், மக்னீசியம், குளோரின் போன்றவை உள்ளன.

அதில் பொட்டாசியம் மற்றும் தாதுஉப்புகள் அதிகம் உள்ளதால் இவை சிறுநீர் அதிக அளவு சீராக வெளியேற உதவுகிறது. புரதத்தின் அளவு தேங்காய்  முதிர்ச்சி அடையும் போது அதிகமாகிறது. இளநீரில் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள், அர்ஜினைன், அலனைன், சிஸ்டைன், செரின் அதிக  அளவில் காணப்படுகிறது. இவை பசும்பாலில் உள்ளதைவிட அதிகம் ஆகும். இளநீரில் புரதத்தின் அளவு 0.13 சதவீதம், முதிர்ச்சி அடைந்த தேங்காய்  நீரில் புரதம் 0.29 சதவீதம் உள்ளது. 8 மாத தேங்காய் பருப்பில் 6.3 சதவீதம் புரதசத்து உள்ளது.

இளநீரில் வழுவழுப்பானதும், இனிப்பானதும் விந்துவை அதிகரிக்கிறது. ஜீரண கோளாறுகளில் அவதியுறும் சிறு குழந்தைகளுக்கு இளநீர் கைகண்ட  மருந்தாகும். உடலில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் கரிமப்பொருட்கள் அதிகம் இளநீரில் உள்ளது. தட்டம்மை, சின்னம்மை, பெரியம்மை ஆகியவற்றால்  ஏற்படும் அரிப்புக்கு நல்ல மருந்து. காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானம். குடலில் உள்ள புழுக்களை அழிக்கிறது. சிறுநீரக நோய்களை  கட்டுப்படுத்துகிறது. முதியவர்களுக்கும், நோயாளிகளுக்கும் நல்ல ஊட்டசத்து மிக்க பானமாகும். சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்க உதவுகிறது.  மேலும் ரத்தத்தில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்ற உதவுகிறது.

News

Read Previous

சிறுத்தையை விட வேகமாக செல்லும் புழு

Read Next

மனதில் தோன்றிய எண்ணங்கள் (கவிதைகள்)

Leave a Reply

Your email address will not be published.