உருளைக்கிழங்கு உண்பதால் கிடைக்கும் நன்மைகள் !

Vinkmag ad

உருளைக்கிழங்கு உண்பதால் கிடைக்கும்

நன்மைகள் !

 

பல வகையான கிழங்கு வகைகள் உள்ளன. அவற்றுள் முக்கியமான ஒரு கிழங்காகவும், அனைவருக்கும் பிடித்த கிழங்காகவும் கருதப்படுவது உருளைக்கிழங்கு. இத்தகைய உருளைக்கிழங்கை விரும்பாதவர்களே இருக்க முடியாது. உருளைக்கிழங்கு விரும்புபவர்களுக்கும் சரி, அதை விரும்பாதவர்களும் சரி, அதனைச் சமமான அளவு நேசித்தே ஆக வேண்டும். ஏனென்றால் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் தவிர, அதிலிருந்து அவிழ்க்கப்பட வேண்டிய இரகசியங்கள் பல உள்ளன. இப்போது அதன் நன்மைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

எடை கூடுதல் : உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளன. ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும்.

செரிமானம் : கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால் அது சுலபமான செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். அதனால் நோயாளிகள், குழந்தைகள், செரிமானமின்மையால் சிரமப்படுபவர்கள் ஆகியோருக்கு இது சிறந்த உணவாய் விளங்குகிறது.

சருமப் பாதுகாப்பு : வைட்டமின் சி, வைட்டமின் பி, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், ஜிங்க் ஆகிய கனிமங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. மேலும், பச்சை உருளைக்கிழங்கை அரைத்து எடுத்த விழுதைத் தேனுடன் கலந்து சருமத்தில் தடவினால் சருமம் மிளிரும். மேலும் இது பரு மற்றும் சருமப் புள்ளிகளைக் குணப்படுத்த உதவும்.

கிழ்வாதம் : இங்கு இதை இரண்டு கோணங்களாக எடுத்துக்கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கில் வைட்டமின்கள், கால்சியம், மெக்னீசியம் ஆகியவை இருப்பதால் இது கீழ்வாத நோய்க்கு ஒரு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. வேக வைத்த உருளைக்கிழங்குகளின் தண்ணீர் கீழ்வாதத்திற்கு நிவாரணியாக இருக்கிறது. ஆனால் இதில் ஒரு சங்கடமும் உண்டு. ஸ்டார்ச் அல்லது கார்போஹைட்ரேட் அளவு உருளைக்கிழங்கில் அதிகளவு இருப்பதால், பொதுவாக உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். இதுவே கீழ்வாதம் உள்ளவர்களுக்குக் கேடாகப் போய் முடியவும் வாய்ப்புள்ளது.

அழற்சி/வீக்கம் : உட்புறமற்றும் வெளிப்புறவீக்கம் மற்றும் அழற்சிக்கு ஏற்றமருந்தாக விளங்குகிறது. உருளைக்கிழங்கு இது மிகவும் மென்மையாக, எளிதில் செரிமானம் ஆகக்கூடியதாக இருக்கும். மேலும் இதனுள் அதிகமாக வைட்டமின் சி, பொட்டாசியம், வைட்டமின் பி6 ஆகியவை இருப்பதால் குடல்களிலும் செரிமான அமைப்பிலும் ஏற்பட்டிருக்கும் அழற்சியைச் சரி செய்யும்.

வாய்ப்புண் : வாய்ப்புண் உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு ஒரு சிறந்த உணவாக இருக்கும். பச்சை உருளைக்கிழங்கை அரைத்து வாய்ப்புண்களில் மேல் தடவினால் நிவாரணம் கிடைக்கும். இன்னும் பல நன்மைகளும் இதில் உண்டு என்பதை நாம் அறிவோம்.

 

நன்றி : இனிய திசைகள் – ஜுலை 2014

News

Read Previous

தமிழ் விக்கிபீடியாவின் புதிய திட்டம்

Read Next

பெருமை….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *