உணவே மருந்து : குளிர்பானங்கள் குடிக்கலாமா ?

Vinkmag ad

 

  இப்போது குளிர்பானங்கள் அருந்துவது நாகரிமாகி விட்டது. இரண்டு பேர் சந்தித்தால் அவர்கள் கையில் கண்டிப்பாக கூல்டிரிங்க்ஸ் இருக்கும். குறிப்பாக விருந்தினர்களை நன்கு மதித்ததன் அடையாளமாகப் பாட்டில் பானங்களையே வழங்குகிறார்கள். அதுவே விருந்தினருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் உண்மையில் இந்தக் குளிர்பானங்கள் உடலுக்குக் கேடுதான் விளைவிக்கிறது. இந்தக் குளிர்பான வகைகள் அனைத்தும் பாட்டிலில், டின்னில் நீண்ட நாள்கள் கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக இருக்க பென்ஸாயிக் என்ற அமிலமே பயன்படுத்தப்படுகிறது.

பென்ஸாயிக் என்ற இந்த அமிலம் ஆஸ்துமா, பரு, தோலில் வேனல் கட்டி, வெடிப்பு முதலியவற்றை உண்டாக்குகிறது. கூடவே எதிலும் குற்றம் கண்டுபிடிக்கும் மனப்பான்மையையும் உண்டாக்குகிறது. குளிர்பானங்களைப் பதனப்படுத்துவதுடன் எலுமிச்சைப் பானங்கள் கருப்பு நிறமாக மாறி விடாமல் இருக்கவும் சல்ஃபர் டை ஆக்சைடு சேர்க்கப்படுகிறது. இது பானங்களில் உள்ள நறுமணம் ஆவியாகிப் போய்விடாமல் பாதுகாக்கிறது. இந்த சல்ஃபர் டை ஆக்சைடு ஒரு நச்சு முறிவு மருந்து தான். நலமாக உள்ள ஒருவர் தொடர்ந்து குளிர்பானம் அருந்தினால் மந்தநிலை, தெளிவற்ற பார்வை, தோலில் வெடிப்பு, வீக்கம், சோர்வு, இதயத்தில் ஒருவித இறுக்கம், அதிர்ச்சி, திடீர்க்கோபம், அதிர்ச்சியில் இறப்பு போன்றவை ஏற்படுகின்றன. அடிக்கடி பானம் அருந்துகிறவர்கள் தங்களுக்கு அடிக்கடி சோர்வும், விரக்தியும், வெறுப்பும் உள்ளதா என்பதைப் பரிசோதித்துக்கொள்க. அப்படி இருந்தால் ஆரோக்கியமான உடலில் பானம் மூலம் சேர்ந்த சல்ஃபர் டை ஆக்சைடே காரணம்.

பானங்கள் நறுமணமாக இருக்க காஃபைன் சேர்க்கப்படுகிறது. கோலா பானங்களில் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் காஃபைன் சேர்க்கப்படுகிறது. இந்த அளவு, நாம் தினமும் அருந்தும் காஃபி, தேநீர் போன்றவற்றில் உள்ள அளவிற்குச் சமம். காஃபைன் உண்மையில் போதை தரும் ஒரு மருந்துதான். இது அதிகமானால் மத்திய நரம்பு மண்டலம் அடிக்கடி ஊக்குவிக்கப்படுவதால் விரைவில் தளர்ச்சியும் வந்துவிடுகிறது. குளிர்பானம் ஒரு முறை சாப்பிட்டதும் வரும் புத்துணர்ச்சி நாம் ஒரு நாளில் மூன்று கப் காஃபி அருந்தியதற்குச் சமம். ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று பாட்டில்கள் அருந்தினால் மத்திய நரம்பு மண்டலம் பலவீனம் அடையும்.

இதனால் தூக்கமின்மை, நரம்புக்கோளாறு, எரிச்சல், வயிற்றுப்பொருமல், மனக்குழப்பம், இதயம் வேக வேகமாகத் துடித்து ஒருவிதப் பதற்றம் முதலியன ஏற்படுகின்றன. சிறுநீர்ப்பைகள், வயிறு முதலியவற்றில் புற்றுநோய், இரத்தக்கொதிப்பு, மேலும் ஆறுவிதமான புற்றுநோய்கள் அடிக்கடி கலர் அருந்துகிறவர்களுக்கு வருகிறது. அடிக்கடி இளவயதில் பானம் அருந்தும் தம்பதிகளுக்குப் பிறவியிலேயே குறைபாடு உள்ள குழந்தைகள் பிறந்துள்ளன.

ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்திலும் குளிர்பானங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த டார்ட்ராஜைன் என்ற பானத்தை நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன. இந்த வண்ணச் சாயம் தோலுக்கு ஒவ்வாமையைத் தந்து, உடலில் வீக்கம், மூக்கு ஊற்றுதல் (கடுமையான ஜலதோஷம்) கண்கள் சிவப்பாக மாறுதல் ஆகிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

சிவப்பு நிறபானங்கள் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. ஸாஃப்ட் டிரிங்க் பானங்களில் நிறத்துக்குச் சேர்க்கப்படும் இந்தச் சிவப்புச் சாயம் புற்றுநோய், ஒவ்வாமை,

சாப்பிட்ட உணவை அல்லது தயாரித்த உணவை நஞ்சாக மாற்றி விடுகிறது. எனவே அடுத்த முறை குளிர்பானம் அருந்த நினைக்கும் போது அந்த எண்ணத்தைக் கைவிட்டு, இயற்கையான பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றை அருந்துங்கள். உடலுக்கு நன்மை செய்யும் பானங்கள் இவை மட்டுமே !

 

நன்றி : இனிய திசைகள் ஏப்ரல் 2013

News

Read Previous

ஆக்கத்திறன் வளர்க்க அரிய ‘யோசனைகள்!!

Read Next

திருக்குறளே தேசிய நூல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *