இஞ்சி

Vinkmag ad

‘காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்’ங்கறது மூத்தோர் வாக்கு. இதன்படி சாப்பிட்டு வந்தா… நோய்கள் வராமல் தடுக்கிறதோட… ஏற்கெனவே வந்த சில நோய்களையும் விரட்டி அடிக்கலாம். இதில் முதலிடத்தில் இருக்கறது இஞ்சி.

இஞ்சியை நிதமும் சாப்பாட்டுல சேர்க்கறது ஒரு வகைனா… இஞ்சியை மட்டுமே தனியா சாப்பிடறது இன்னொரு வகை. அதாவது, 15 கிராம் இஞ்சியை தேவையான அளவு தண்ணி விட்டு சாறு எடுத்து 5 நிமிஷம் அப்படியே வைங்க. அடியில வெள்ளையா படிஞ்சுருக்கும். அதை விட்டுட்டு மேல தெளிஞ்சிருக்குற தண்ணிய மட்டும் குடிச்சீங்கனா… வாய்வுக்கோளாறு, ஜீரணக்கோளாறு, சளித்தொல்லை எல்லாம் விலகி ஓடிடும்.

ரத்த அழுத்தம் குறைவா இருக்கறவங்க… 30 கிராம் இஞ்சியை தண்ணி விடாம அரைச்சு சாறு எடுத்து, அதுல ஒரு டேபிள்ஸ்பூன் தேன்  சேர்த்து குடிச்சீங்கனா… அடுத்த அஞ்சு, பத்து நிமிஷத்துல ரத்த அழுத்தம் சமநிலைக்கு வந்துடும். இதனால வரக்கூடிய தலைவலியும் நின்னுடும்.

பித்தத்தை தணிச்சு, அதனால் வரக்கூடிய குறைகளை போக்குறதுல இஞ்சிக்கு இணை இந்த உலகத்துல இல்லைனே சொல்லலாம்! பித்தத்தால மயக்கம் வந்து நிலைதடுமாறி விழறவங்களும் உண்டு. இவங்களுக்கு இஞ்சி நல்ல பலன் கொடுக்கும். 5 கிராம் அளவுள்ள ஒரு துண்டு          இஞ்சியை எடுத்து தோல் நீக்கி, அம்மி இல்லைனா மிக்ஸியில அரைச்சி எடுங்க. ஒரு டம்ளர் தண்ணி விட்டு கலக்கி, கொஞ்ச நேரம் கழிச்சி, தெளிஞ்ச நீரை எடுத்து வெச்சுக்கோங்க. அடுப்புல பாத்திரத்தை வெச்சு ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரையை போட்டு வறுத்தெடுங்க. அது பொன்னிறமாகி இளகுற நிலையில, தெளிஞ்ச இஞ்சித் தண்ணியை அதுல சேருங்க. கூடவே, 15 கிராம் உலர்திராட்சையையும் போட்டு வேகற வரைக்கும் கொதிக்க விடுங்க.

 

சூடு ஆறினதும் அந்த நீரைக் குடிச்சுட்டு, வெந்த திராட்சையையும் சாப்பிட்டுடுங்க. இதுக்குப்பிறகு அரை மணி, இல்லைனா ஒரு மணி நேரம் கழிச்சி காலை சாப்பாட்டை சாப்பிடணும். தொடர்ந்து மூணு நாள் இப்படி சாப்பிட்டுப் பாருங்க… பலன் இல்லாட்டி எனக்கு எழுதுங்க.

source: http://indru.todayindia.info/namma-ooru-medies-2/

News

Read Previous

மதங்களின் பார்வையில் பெண்கள்

Read Next

தேவகோட்டை ராமநாதன் சொற்பொழிவு

Leave a Reply

Your email address will not be published.