அக்குபங்சர் ஒர் விளக்கம்

Vinkmag ad

அக்குபங்சர் ஒர் விளக்கம்.
முன்னுறை

அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம் போன்றவை போலவே அக்குபங்ச்சரும் ஒரு தனிப்பட்ட வைத்திய முறைதான். ஆனால் அது முற்றிலும் வித்தியசமானது.

மருந்து, மாத்திரம், சூரணம், லேகியம் போன்றவற்றை எதுவும் கொடுக்காமல் ஊசியும் போடாமல், மனித உடலை மூடிக் கொண்டிருக்கும் தோலில் அக்குபங்சர் ஊசியைச் செருகுவதன் மூலம் எல்லா வகையான நோய்களையும் குணப்படுத்தலாம் என்று சொன்னால் சாதாரண மனிதர்களால் அதை நம்பவே முடியாது.

ஆனால் அதுதான் உண்மை! அதிசயத்தக்க உண்மை! இன்று ஆயிரக் கணக்கான நோயாளிகள் அக்குபங்சர் மூலம் குணமடைகிறார்கள்.

அக்குபங்சர் சிகிச்சை முறை தோன்றிய இடம் சீன நாடு ஆகும். ஆனால் இன்று அது உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. சீன டாக்டர்களைப் போலவே மேல்நாட்டு டாக்டர்களும் சிறப்பாக அக்குபங்சர் சிகிச்சை அளிக்கின்றார்கள்.

சாதாரணமாக, நோய்களைக் குணப்படுத்துவதற்காக வைத்தியம் பார்ப்பவர்கள் மருந்து மாத்திரைகள் கொடுப்பார்கள். அல்லது ஊசி வழியாக மருந்தை உடலுக்குள் செலுத்துவார்கள்.

ஆனால் அக்குபங்ச்சர் முறை அப்படிப்பட்டதல்ல. உடலில் ஒரு குறிப்பிட்ட புள்ளிகளில் ஊசிகளைச் செருகுகிறார்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு அந்த ஊசிகளை எடுத்து விடுகிறார்கள்.

இவ்வாறு சில நாட்கள் செய்ததும் நோய்கள் குணமாகி விடுகிறது! கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? மருந்து கொடுப்பதில்லை, மாத்திரைகொடுப்படில்லை, ஊசி மூலம் உடலுக்குள் மருந்தையும் செலுத்துவதில்லை. உடலில் சில குறிப்பிட்ட புள்ளிகளில் ஊசிகளைச் செருகி வைப்பதன் மூலம் நோய்களைக் குணப்படுத்துகிறார்கள் என்றால் அது நம்பும்படியாகவா இருக்கிறது?

ஆனால் அதை நம்பித்தான் ஆகவேண்டும். ஏனென்றால் அது உண்மை. உலகின் பல பாகங்களிலும் இன்று இலட்சக் கணக்கான மக்கள் அக்குபங்சர் சிகிச்சை மூலம் நோய் நீங்கிக் குணமடைகிறார்கள்.

அக்குபங்சர் சிகிச்சை மூலம் சில குறிப்பிட்ட நோய்களைத்தான் குணப்படுத்த முடியும் என்பதில்லை. எல்லா வகையான நோய்களையும் குணப்படுத்த முடியும். அதற்கான அத்தனை சாத்திய கூறுகளும் அக்குபங்சர் வைத்தியத்தில் உள்ளது.
1. அக்குபங்சர் என்றால் என்ன?

அக்குபங்சர் என்பது  மருந்து மாத்திரை ஏதுமில்லாமல் நாடிப் பரிசோதனையின் மூலம் நோய்களை கண்டறிந்து மிக மெல்லிய ஊசிகளை கொண்டு உடலிலும் மனதிலும் ஏற்படும் நோய்களை நீக்கக்கூடிய சீனமருத்துவ முறையாகும்.

2. அக்குபங்சர் எதன் அடிப்படையில் வேலை செய்கிறது?

அக்குபங்சர் சக்தியை (Energy) அடிப்படையாக கொண்ட  ஒரு முழுமையான  பக்கவிளைவுகள் இல்லாத மருத்துவமாகும். நம் உடம்பில் நரம்புகள், இரத்த குழாய்கள் இருப்பது போலவே சருமத்தில் சக்தி ஒட்ட பாதைகள் (Meridians) நமது கண்ணுக்குப் புலப்படாத வகையில் அமைந்துள்ளன. இவை பொதுவாக நமது உடம்பில் 26 பாதைகள் (Channels) வழியாக இருதயம், கல்லிரல், மண்ணீரல் போன்ற உள் உறுப்புகளுடன் தொடர்பு கொண்டு தலைமுதல்பாதம்வரை சுற்றிவருகிறது.

 இந்தப் பாதையில் உள்ள ஏதாவது ஒரு புள்ளியில் சக்தி (Energy) தேக்கமடைந்தாலும், குறைபாடு ஏற்பட்டாலும் நமது உடம்பில் பாதிப்புகள் ஏற்பட்டு நோய்கள் உண்டாகிறது. அப்போது அக்குபங்சர் நாடிப் பரிசோதனையின் (Pulse Diagnosis) மூலம் பாதிப்படைந்துள்ளப் புள்ளியை கண்டறிந்து மிக மெல்லிய அக்குபங்சர் ஊசிகள் மூலம் அல்லது விரலைக்கொண்டு தொடுதல் போன்ற முறைகளில் தூண்டும்போது பாதிக்கபட்டுள்ள சக்திப்புள்ளி இப்பிரபஞ்ச சக்தியுடன் (Cosmic Energy) தொடர்புக்கொண்டு மறுபடியும் உயிர்ப்புடன் இயக்கம் பெற்று நோய்கள் குணடைகின்றன.

இந்த ஊசிகள் மூலம் மருந்துகள் எதுவும் செலுத்தப்படுவதில்லை. நோய் என்ன என்பதை கண்டறியச் செய்யப்படும் மலம், சிறுநீர், இரத்தப்பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற பரிசோதனைகளுக்கும் அக்குபங்சர் மருத்துவமுறையில் அவசியமில்லை. 

3. பரிசோதனைகள் கருவிகள் இல்லாமல் அக்குபங்சரில் நோய்கள் எவ்வாறு      கண்டுபிடிக்கப்படுகிறது?

ஒரு அக்குபங்சர் மருத்துவரின் சிறப்பம்சமே பரிசோதனைகள் கருவிகள் இல்லாமல் நோய்களை கண்டுபிடிப்பதுதான். நமது உடலில் வயிறு, பெருங்குடல், சிறுகுடல், இருதயம், பெரிகார்டியம், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, பித்தப்பை, தேக வெப்பக் கட்டுபாடு போன்ற முக்கியமான 12 உள்ளுருப்புகள் உள்ளன. இந்த உறுப்புகள் எந்தத் தன்மையில் இயங்குகிறது, எது பாதிப்படைந்துள்ளது, நோய்களுக்கு காரணமான உறுப்பு எது, அதன் சக்தி நிலை என்ன என்பதை நாடிப் பரிசோதனையின் (Pulse Diagnosis) மூலம் கண்டுபிடித்துவிட முடியும். அதுவும் ஒரிரு நிமிடங்களில் கண்டுபிடித்துவிடலாம்.

Dr. K. Ghouse Mohideen, MD (Acu).,
(D.Ac., D.P.T., D.Cos.Ac., Dip.Hom., D.Pr.H., D.Var.T., D.Hip.T,)
acu_home@yahoo.com – Cell: 0091- 98947 53790,  9940 723723.

News

Read Previous

நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் காய்கறிகள்

Read Next

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் : ரபீஉல் அவ்வல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *